குழந்தைகள் நலன் காக்கும் இந்தியாவின் முதல் பெயின்ட் நிப்பான் ‘KIDZ’ ரகம் இன்று அறிமுகம்

  •  குழந்தைகளின் உடல்நலம் காக்க தயாரிக்கப்பட்ட   முதல் இந்திய பெயின்ட்!
  • வீட்டின் உட்புறங்களில் சுவர் தொட்டு விளையாடும் குழந்தைகளுக்கு KIDZ  பெயின்ட் முழு பாதுகாப்பு   அளித்துஅவர்கள் வரைந்து விளையாட அழகிய  களங்களாகவும் சுவர்களை மாற்றுகிறது!
  • பள்ளி மாணவர்களுக்கென நடத்திய சூப்பர்ஹீரோ போட்டியின் 50 வெற்றியாளர்கள் விழாவில்  கௌரவிக்கப்பட்டனர்!

 சென்னைநவம்பர்  24th 2018: நிப்பான் பெயின்ட்  (இந்தியா) பி. லிட்., ஆசியாவின் முதன்மை பெயின்ட்  தயாரிப்பாளர், இன்று இந்திய சந்தையில், குழந்தைகளுக்கான KIDZ  Paint அறிமுகப்படுத்தியது.  இன்றைய சூழலில் வாழும் குழந்தைகளின் நலனைக்  கருத்தில் கொண்டு பிரத்தியேகமாகத் தயாரிக்கப்பட்ட  KIDZ பெயின்ட் வகை, அறைகளில் பாதுகாப்பு, மற்றும்  குழந்தைகள் உடல்நலன் பேணும் நோக்கோடு  உருவாக்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் முதன்முறையாக இவ்வகை பெயின்ட்டை சென்னை ITC கிரான்ட்  சோழாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அறிமுகம் செய்ததில் திரு. S. மகேஷ் ஆனந்த்,  தலைவர், நிப்பான் பெயின்ட் – டெகரேட்டிவ் பிரிவு,  பெருமிதம் கொள்கிறார்.

“எங்கள் நெடுங்கால அனுபவத்தின் அடிப்படையில் கடுமையான சோதனைகளுக்கு  உட்படுத்தப்பட்டு நிப்பான் KIDZ பெயின்ட் உருவாகியுள்ளது. சாதாரண பெயின்ட் பயன்பாட்டினால் குழந்தைகள் நலனை பாதிக்கும் மூன்று முக்கிய உண்மைகளை எங்கள் ஆராய்ச்சிப் பிரிவு கண்டுபிடித்தனர்.

உண்மை 1:

பிறந்த குழந்தைகள் பெரியவர்களை விட மூன்று மடங்கு வேகமாக சுவாசிக்கின்றனர்.  எனவே, வளர்ந்து வரும் நுரையீரல்களைக் காக்க, அவர்களைச் சுற்றி எப்போதும்  தூயகாற்று இருத்தல் மிகவும் அவசியம்.  

இந்த மூன்று விளைவுகளிலிருந்தும் குழந்தைகளைக் காக்கிறது நிப்பான் KIDZ!

வீட்டில் பயன்படுத்தும் மரப் பொருட்கள், கம்பளங்கள், மிதியடிகள், மெத்தைகள்  ஃபார்மல்டீஹைடு நச்சு வாயுவைவெளியிடுகின்றன. நிப்பான் KIDZ பெயின்ட்டின் ஃபார்மல்டீஹைடு-உறிஞ்சும் தொழில்நுட்பம், குழந்தைகளுக்கு  வெறும் தூய  காற்றையே நல்குகிறது!

உண்மை 2:

கைக்குழந்தைகளுக்கு, தவழும் குழந்தைகளும் முழு நேரம் வீட்டின் உள்ளேயே  வாழ்கின்றனர். இதனால், பாக்டீரியா, பூஞ்சை போன்ற நுண்ணுயிரிகள் தோற்று  அவர்களுக்கு வரும் வாய்ப்புகள் மிக அதிகம்.

நிப்பான் KIDZ பெயின்ட்டின் ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் ‘Safe Touch’  தொழில்நுட்பம், 99 சதம் வரை  நோய் தொற்றினைத் தடுக்கிறது.

உண்மை 3:

76 சதம் பெற்றோர், தமது குழந்தைகள் சுவர்களில் கிறுக்கி,படங்கள் வரைவது,  அவர்களது கலைத்திறனை, அறிவாற்றலை வளர்க்கிறது என நம்புகின்றனர்.

நிப்பான் KIDZ பெயின்ட்டின் உள்ளடங்கிய கறை-அகற்றும் தொழில்நுட்பம்,  சுவர்களை  சுத்தம் செய்தலை மிகவும் எளிதாக்குகிறது. 10,000 முறையைத் தாண்டியும் சுவர்  பூச்சுதிடமாக நிற்கும் வல்லமை கொண்டது.

“நிப்பான் பெயின்ட் துவக்கத்திலிருந்தே புரட்சிகரமான,  நவீன பெயின்ட் வகைகளை  உருவாக்கி, மக்கள்  மனங்களைக் குளிர்வித்து வருகிறது. KIDZ பெயின்ட்  அறிமுகம்  செய்ததன் பின்னணியில் நிப்பான்  மேற்கொண்ட பல்லாண்டு கால ஆராய்ச்சிகளும்  சந்தை  குறித்த ஆழ்ந்த புரிதல்களும் துணைபுரிந்துள்ளது. KIDZ பெயின்ட்  இந்தியாவின் ஒவ்வொரு குழந்தையின்  அறையிலும் இடம்பெறச் செய்து, அவர்கள் வளர்ச்சியிலும்  நல வாழ்விலும் துணை நிற்பதே நிப்பான் நிறுவனத்தின்  குறிக்கோள்,” என்கிறார் மகேஷ் ஆனந்த்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, பாராட்டு பெற்ற குழந்தை மனநல நிபுணர்  Dr. ஜெயந்தி,  நடிகை தேவ தர்ஷினி, குழந்தைகள் நலவாழ்வுக்கான களச் செயல்பாட்டாளர்  கன்யாபாபு, மற்றும் பிக் பாஸ் புகழ் விஜயலட்சுமி ஆகியோர் பங்குபெற்ற கருத்து-கலந்துரையாடல்  நடைபெற்றது. குழந்தை நலமருத்துவர் Dr. தனசேகர்  தலைமையில் நடந்த கலந்துரையாடலை, அக-  வடிவமைப்பாளர்கள், மற்றும் சிந்தனையாளர்கள் கண்டு  களித்தனர்.

நிப்பான் KIDZ பெயின்ட் நவம்பர் 26 முதல் தமிழகம் எங்கும்கிடைக்கும்.

மேலும் தகவல்களுக்கு www.nipponpaint.co.in/ வாருங்கள்!