நேர்மையற்ற செய்திகளை ஊடகங்கள் வெளியிடக் கூடாது – பாராளுமன்றம்

மிகப்பெரிய செய்தி நிறுவனங்கள் பாராளுமன்றத்தில் நடைபெறும் ஆக்கப்பூர்வமான விவாதங்களை செய்திகளாக வெளியிடுவதில்லை என்ற பிரச்சனையை மாநிலங்களவையில் இன்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பினர்.  அதேபோல், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதங்களின் போது வலியுறுத்தப்பட்ட பரிந்துரைகளையும் செய்திகளாக வெளியிடவில்லை என்றும் கூறினர். 

பாராளுமன்றத்தில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை தெரியப்படுத்த வேண்டும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்க்கின்றனர் என்று விவாதத்தின் போது பேசிய சமாஜ்வாடி கட்சி எம்.பி. நரேஷ் அகர்வால் தெரிவித்தார். இதனால் ஊடகங்களுக்கு பாராளுமன்றம் வழிகாட்ட வேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சரத் யாதவ் வலியுறுத்தினார். 

இந்த பிரச்சனை குறித்து மாநிலங்களவையில் இன்று பேசிய துணை சபாநாயகர் பி.ஜே.குரியன்,  நேர்மையற்ற செய்திகளை வெளியிட கூடாது என்று ஊடகங்களுக்கு வலியுறுத்தினார். இருப்பினும்,  எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு பதில் அளிக்கையில், ஊடகங்கள் செய்தி வெளியிடாததற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? என்று குரியன் கூறினார்.