முதல்வரின் அறிக்கை ஆறுதல் அளிக்கிறது – இயக்குனர் பேரரசு

நம் நாட்டில் கல்லூரிகளிலும், பள்ளிகளும் மேலும் தொழில் மையங்களிலும் பாலியல் தொல்லையும், பாலியல் பலாத்காரமும் தொடர்ந்து கொண்டிருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது.

இதற்கொரு தீர்வு கிடைக்காத என்ற ஏக்கம், எதிர்பார்ப்பு மக்களிடத்திலும்,பெற்றோர்களிடத்திலும் அதிகரித்திருக்கும் வேளையில்
ஒரு தந்தை ஸ்தானத்தில் வேதனையோடு முதல்வர் கொடுத்திருக்கும் அறிக்கை மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது.
முதல்வரின் உணர்வோடு அதிகாரிகளும் செயல்பட்டால் நிச்சயம் பாலியல் தொல்லைகளும், பாலாதகாரங்களும் நம் நாட்டில் குறைய வாய்ப்பிருக்கிறது.

பெண் குழந்தைகள் தன்னை காத்துக்கொள்ள முதல்வர் அறிவித்திருக்கும் தொலைபேசி எண் 1098 அனைத்துப்பெண்களும் மனதில் பதியவைத்துக்கொள்ள வேண்டும்!
1098 என்ற எண் மகளிர் காக்கும் மந்திரமாக இருக்க வேண்டும்!
நன்றி முதல்வரே!
விட்ராதீங்க முதல்வரே!!

—இயக்குனர் பேரரசு