பாடலாசிரியர் கலைக்குமார் எழுதிய “ஏதோ ஒரு பாட்டு” மெட்டில் கொரோனா பயம் போக்கும் தன்னம்பிக்கைப் பாடல்…

பாடலாசிரியர் கலைக்குமார் இயக்குனர் விக்ரமன் அவர்களிடம்

“பூவே உனக்காக…”
“சூர்ய வம்சம்…”
” உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்…” – உட்பட பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்…

“உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்” படத்தில்
“ஏதோ ஒரு பாட்டு” மூலம் பாடலாசிரியராக பிரபலமாகி…
தொடர்ந்து…
மின்சாரக் கண்ணா
படத்தில்
“உன்பேர் சொல்ல ஆசைதான்”
தெனாலி படத்தில்
ஏ.ஆர் ரஹ்மான் இசையில்
“ஆலங்கட்டி மழை” ,
நினைத்தாலே இனிக்கும் படத்தில் “அழகாய் பூக்குதே”
மற்றும் ஆனந்தம், பகவதி, சமுத்திரம், திருடாதிருடி, ஏய், தம், அரசு, வாடா, இந்தியா பாகிஸ்தான், பில்லா பாண்டி, நேத்ரா, அடவி ஆகிய படங்கள் உட்பட
கிட்டத்தட்ட ஐநூறுக்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியவர்.

பாடலாசிரியர் கலைக்குமார் எழுதிய “ஏதோ ஒரு பாட்டு” மெட்டில் கொரோனா பயம் போக்கும் தன்னம்பிக்கைப் பாடல்…

பல்லவி
“””””””””””””
ஏதோ ஒரு சாபம்
என கொரோனா தாக்கும் தாக்கும் போதெல்லாம்
பலஉயிருடன்விளையாடும்

இதை இயற்கையின்
விதி என்பதா,
இல்லை செயற்கையின் சதி என்பதா…

அட நமக்கென்ன
இது புதிதா,
இதை கடந்திட
வா மனிதா…

தனிமைஎன்னும்
ஆயுதமே,
தாங்கிநாமும்
போரிடுவோம்…

மறைந்துதாக்கும் கிருமியையும்,
மதியைவைத்து
வென்றிடுவோம்…

சரணம் – 1
“””””””””””””””””
போதி மரமாக
நம் வீடே மாறிடுமே, போற்றும் உறவெல்லாம் புது ஞானம் தந்திடுமே…

பூட்டிய பூமியின்
பூட்டை உடைத்திடும்
காலம் வந்திடுமே…

மனித மனங்களே
அன்று
புனிதம் ஆகுமே…

புதிய உலகமே
பிறவி
பலனை உணர்த்துமே…

சரணம் – 2
“”””””””””””””””””
எமனே வந்தாலும்
நாம் எதிர்த்தே நிற்போமே, எதிரி இந்தக்கிருமி
அதை எரித்தே விடுவோமே

நம்பிக்கை என்ற
நம்பலம் போதும் நோய்களும் இறந்திடுமே…

கொரோனாவிற்கே
ஒருநாள்
கொள்ளி வைக்கலாம்…

கோடி அன்பிலே
உலகை
அள்ளி அணைக்கலாம்…