மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குனர் பேரரசு வேண்டுகோள்

மாண்புமிகு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு!

ஜெயலலிதா அவர்கள் ஆட்சியில் இருக்கும் போது அவர்கள் உருவாக்கிய சினிமா நகரத்துக்கு அவர் பெயரையே வைத்து J J FILM CITY என்று பெயர் சூட்டினார்!

அதன் பிறகு ஆட்சிக்கு வந்த கலைஞர் அவர்கள் அதை MGR FILM CITY என்று மாற்றினார். உயிரோடு உள்ள தலைவரின் பெயரில் இருக்க வேண்டாம் என்ற நியாயமான காரணம் அது. மேலும் மறைந்த வேற எந்த தலைவரின் பெயரை வைக்காமல் தன் அரசியல் எதிராய் இருந்த எம்ஜிஆர் அவர்களின் பெயரை வைத்தது அவரின் பெருந்தன்மையை காட்டியது.
தற்பொழுது ‘அம்மா உணவகம்’ ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் உருவானது. பல ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் பசியை போக்கியது. தற்பொழுது ஜெ அவர்கள் உயிரோடு இல்லை.
உங்கள் ஆட்சியிலும் அது ‘ அம்மா உணவகம்’ என்ற பெயரிலேயே நீங்கள் தொடரச்செய்தால் உங்களின் பெருந்தன்மையை மக்கள் உணர்வார்கள்.

‘கலைஞர் உணவகம்’ என்று மாறும் பொழுது அடுத்து வேறு யாராவது ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மீண்டும் அந்த திட்டத்தின் பெயரை மாற்றுவர்.
இப்படித்தான் ‘ கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’ என்ற அற்புதமான திட்டம் அடுத்த வந்த ஆட்சியில் அது நிலைகுலைந்து போனது.
எனவே தாங்கள் பக்குவப்பட்ட நிலையில் இருப்பீர்கள்.
ஒன்று ‘ அம்மா உணவகமாக ‘ தொடரச் செய்யுங்கள்!
இல்லையென்றால்
‘ அரசு உணவகம்’ என்ற பெயரில் தொடரச்செய்யுங்கள்.
அப்படிச் செய்தால் என்றும் அது மாறாதிருக்கும்.
மேலும் ‘ கலைஞர் ‘பெயரில் ஆரம்பிக்க உங்களிடம் எந்தனையோ திட்டம் இருக்கும்!
இது ஒரு வேண்டுகோள்தான்.
முதல்முறையாக முதல்வர் பதவியேற்கவிருக்கும் தங்களுக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள்.

அன்புடன்
பேரரசு