நிவேதன் மகளிர் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் 15ம் ஆண்டு, உலக மகளிர் தின விழா 2020

சென்னை, மார்ச் 10 : நிவேதன் மகளிர் முன்னேற்ற அறக்கட்ட ளையின் 15ம் ஆண்டு மற்றும் அகில உலக மகளிர் தின விழா 2020 சென்னை, திருவான்மியூர், அமரபாரதி திருமண மண்டபத்தில் 08.03.2020 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது.

எரிவாயு இல்லாமல் சமையல் நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி, சிறப்பு பட்டி மன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடை பெற்றது. சுய தொழிலில் சாதித்த பெண்களுக்கு விருது மற்றும் பரிசு வழங்கப் பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக எம்.எஸ்.பாஸ்கர் சென்னை பெருநகரகாவல் உதவி ஆணையர் இராயப் பேட்டை மற்றும் திருமதி Dr. ஜெயந்தி BITS PILANI, ராஜஸ்தான், திருமதி. சரஸ்வதி சமூக வளர்ச்சி அலுவலர் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் , திருமதி. மினி சாரா ஆபிரகாம், இயக்குநர் Heart for India Foundation , சென்னைஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். பட்டிமன்ற நடுவராக திருமதி. ஸ்ரீ லதா, வனவாணி மேல்நிலைப் பள்ளி, ஆசிரியை , சென்னை கலந்து கொண்டு தீர்ப்பு வழங்கினார்.

உலக மகளிர் தின விழாவை முன்னிட்டு பெண்களுக்கு விழிப் புணர்வு ஏற்படுத்தும் குறும்படம் காண்பிக்கப் பட்டது. உடன் தலைமை இயக்குநர் திருமதி.எம்.நட் சத்திரமேரி, இயக்குநர் செல்வி எம். எனிசா, நிவேதன் மகளிர் முன்னேற்ற அறக்கட்டளை, கிரீன்பீல்ட் சென்னை இண்டர்நேஷனல் பள்ளி மேலாளர் திரு. எஸ். குமார் மற்றும் அறக்கட் டளையின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.