சென்னை நோக்கி நகர்கிறது வங்க கடலில் புதிய புயல்

வங்க கடலில் மேலும் ஒரு புதிய புயல் சின்னம் உருவாகி சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் கடல் பகுதியில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.”சாகர் ” என பெயர் சூட்டப்படுள்ள அந்த புயல் சின்னம் வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னையை நோக்கி நகரும் என எதிர்பாக்கப்படுகிறது.

இந்த புயலால் வட தமிழ் நாடு மற்றும் புதுச்சேரியில் டிசம்பர் 4,5 தேதிகளில் கடும் மற்றும் மிகக்கடும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோரம் மற்றும் குமரி பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். எனவே மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.