நெடுநீர் விமர்சனம்

சிறுவயதில் நாயகன் ராஜ்கிருஷும், நாயகி இந்துஜாவும் சூழ்நிலை காரணமாக தமது சொந்த கிராமத்தை விட்டு வெளியேறுகிறார்கள். வழியில் இருவரும் பிரிந்துவிடுகிறார்கள். நாயகியை தேடி அலையும் நாயகன் சூழ்நிலையால் ரவுடியாகி விடுகிறார். 

8 வருடங்களுக்கு பிறகு நாயகனை சந்திக்கும் நாயகி, ரவுடி தொழிலை விட்டுவிட்டு தன்னுடன் வரும்படி கூறுகிறார். அதன்படி தாதாவிடம் இருந்து நாயகன் விலக முடிவு செய்யும் போது அவரை பழி தீர்க்க காத்திருந்தவர்கள் துரத்துகிறார்கள்.  அவர்களிடம் இருந்து தப்பித்து நாயகியுடன் நாயகன் சேர்ந்தாரா? இல்லையா? என்பதே ‘நெடுநீர்’ படத்தோட மீதி கதை.

நடிகை-நடிகர்கள்:

ராஜ்கிருஷ், இந்துஜா, மா.சத்யா, எச்.கே.மின்னல் ராஜா, மதுரை மோகன் மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பு – கெவின் – வி.எஸ்.பாளையம் எஸ்.கிருஷ்ணமூர்த்தி
இயக்கம் – கு.கி.பத்மநாபன்
ஒளிப்பதிவு – லெனின் சந்திரசேகரன்
இசை – ஹித்தேஷ் முருகவேல்
மக்கள் தொடர்பு – வெங்கட்