லத்தி விமர்சனம் 3.5/5

கான்ஸ்டபிளான முருகானந்தம் (விஷால்) கற்பழிப்பு வழக்கில் சந்தேகப்படும் ரவுடியின் மகனுக்கு லத்தியில் அடித்து தண்டனை தர இதனால் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார். இதனால் வீட்டிலிருக்கும் விஷால் சிபாரிசிற்காக உயர் அதிகாரிகள் பலரிடம் சென்று கேட்கிறார். செவிலியர் மனைவி கவிதா(சுனைனா) பள்ளியில் படிக்கும் மகன் (மாஸ்டர் லிரிஷ் ராகவ்) தான் அவரது வாழ்க்கை. மனைவியின் வேலை செய்யும், மருத்துவமனையில் சிகிச்சை பெரும் உயர் அதிகாரியின் மனைவி மூலம் விஷாலுக்கு சிபாரிசு கிடைத்து போலீஸ் பணியில் சேருகிறார். மீண்டும் வேலை கிடைத்தாலும் பெரும் சிக்கலில் மாட்டி கொள்கிறார். மகளிடம் தப்பாக நடந்த ரவுடியை டிஐஜி (பிரபு) பிடித்து வைத்து முருகானந்தாவிடம் தன் கஸ்டடியில் இருக்கும் அந்த ரவுடியிடம் லத்தியை பயன்படுத்தும்படி டிஐஜி கேட்கிறார். அந்த சமயத்தில் தான் டார்ச்சர் செய்யும் நபர் மிகவும் மோசமான கேங்ஸ்டரான சுறாவின் (சன்னி பிஎன்) மகன் வெள்ளை (ரமணா) என்பது முருகானந்தத்திற்கு தெரியாது. முருகானந்தம் ரவுடி வெள்ளையை அடிப்பதை டிஐஜி படம் பிடித்து வளைதளத்தில் வெளியிட பெரும் பரபரப்பாகிறது. போலீசார் ரவுடி வெள்ளையை விளாசிவிட்டு குப்பை மேட்டில் வீசிவிட, அங்கிருந்து ரவுடி வெள்ளை காப்பாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வெளி வந்தவுடன் முதலில் தன்னை அடித்த முருகானந்தத்தை தேடி சென்னை முழுவதும் உள்ள போலீஸ் நிலையத்தை அலசுகிறார். இதனால் முருகானந்தாவிற்கும் அவரது குடும்பத்திற்கும் எதிர்பாராத பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பிரச்சினைகளில் இருந்து விஷால் தன்னையும், தன் குடும்பத்தையும் காப்பாற்றினாரா? ரவுடி சுறாவும் வெள்ளையனும் என்னவானார்கள்? என்பதே படத்தோட மீதி கதை.

நடிகை-நடிகர்கள்:

விஷால், ரமணா, சுனைனா, பிரபு, தலைவாசல் விஜய், முனிஷ்காந்த், வினோத் சாகர், மிஷா கோஷல், பிரானா, சன்னி பிஎன், லிரிஷ் ராகவ், மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பாளர் – ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமணா மற்றும் நந்தா
இயக்கம் – ஏ.வினோத்குமார்
இசை – யுவன் சங்கர் ராஜா
ஒளிப்பதிவு – பாலசுப்ரமணியம் மற்றும் பாலகிருஷ்ணா
எடிட்டர் – ஸ்ரீகாந்த் என்.பி
கலை இயக்குனர் – கண்ணன்.எஸ் ஸ்டண்ட் டைரக்ஷன் – பீட்டர் ஹெய்ன்
நடன கோரியோகிராபி – தினேஷ்
ஆடை வடிவமைப்பாளர் – வாசுகி பாஸ்கர்
மக்கள் தொடர்பு – ஜான்சன்