டிக் டாக் உலகத்தில் தனது அதிரடியான கவர்ச்சி வீடியோக்கள் மூலம் புகழ்பெற்றவர் இலக்கியா. அவர் திரையுலகில் அறிமுகமாகும் படம்தான் ‘நீ சுடத்தான் வந்தியா?’
காடும் காடு சார்ந்த இடங்களிலும் நடக்கும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை இது.
இப்படத்தை ஆல்பைன் மீடியா நிறுவனம் தயாரிக்கிறது. எடிட்டிங்கும் செய்து இயக்குபவர் க.துரைராஜ்.இவர் இயக்குநர் பிரவீன் காந்தியிடம் சினிமா கற்றவர்.அருண்குமார் நாயகனாக நடிக்கிறார். இலக்கியா நாயகி. மேலும் விஜய் டிவி புகழ் தங்கதுரை, நெல்லை சிவா, கொட்டாச்சி போன்றோரும் நடிக்கிறார்கள். படத்திற்கு செல்வா ஒளிப்பதிவுசெய்கிறார். துரைராஜன் இசையமைக்கிறார்.படத்தில் ஐந்து பாடல்கள் ,இரண்டு சண்டைக் காட்சிகள் உள்ளன.
‘டிக் டாக் இலக்கியா’வை நடிக்க வைத்த அனுபவம் பற்றி இயக்குநர் க.துரைராஜ் கூறும்போது “டிக் டாக்கிற்காக வீடியோவில் தோன்றி நடிப்பது வேறு .படத்தில் காட்சிகளில் நடிப்பது வேறு.
ஆரம்பத்தில் சில நாட்களில் காட்சிகளில் நடிப்பதற்கு அவருக்குச் சிரமமாக இருந்தது. போகப் போக சரியாகிவிட்டது. சில நாட்களில் நான் சொல்வதைப் புரிந்துகொண்டு சரியாக நடித்தார். இந்தப்பட அனுபவம் முற்றிலும் மாறுபட்டதாக இருந்ததாக இலக்கியா கூறினார். டிக் டிக் போல மிகையாக இல்லாமல் அவர் படத்தில் நாகரிகமான அளவான கவர்ச்சித் தோற்றத்தில் நடித்திருக்கிறார்.” என்றார்.
கதை பற்றிக் கூறும்போது,
“தனது மகளுக்குத் திருமணப் பரிசாக ஒரு பங்களாவை வாங்கிக் கொடுக்க நினைக்கிறார் தந்தை. வாங்குவதற்கு முன் அதை போய்ப் பார்த்து விட்டு வருமாறு மகளை வருங்காலக் கணவருடன் அனுப்பி வைக்கிறார். அந்த பங்களா காட்டுப் பகுதியில் உள்ளது. பார்க்கப்போனபோது உள்ளே நுழைந்ததும் அவர்களுக்குள் ஓர் அமானுஷ்ய சக்தி புகுந்து கொண்டு அவர்களை ஆட்டிவைக்கிறது .அது மட்டுமல்ல அவர்கள் மூலம் தனது எதிரிகளைப் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்குகிறது. அதிலிருந்து எப்படித் தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.
கதையின் பெரும்பகுதி காடுகளில் நடக்கிறது. பல்வேறு காடுகளில் சிரமப்பட்டுப் படம்பிடித்தோம். சிறு பகுதி மட்டும் சென்னையில் படமானது.” என்கிறார்.பரபரப்பு சஸ்பென்ஸ் கவர்ச்சி என வணிகக் கலவையில் உருவாகியுள்ளது
‘நீ சுடத்தான் வந்தியா?’படம். விரைவில் வெள்ளித்திரையில்…