அமித்ஷா ஒன்றும் அவதார புருஷர் கிடையாது – நாஞ்சில் சம்பத்

டி.டி.வி.தினகரன் அணியின் ஆதரவாளர் நாஞ்சில் சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லா அறைகூவல்களையும் சந்திக்க டி.டி.தினகரன் தயாராக இருக்கிறார். அமித்ஷா ஒன்றும் அவதார புருஷர் கிடையாது – தமிழகம் ஒன்றும் குஜராத் இல்லை.

பன்னீர்செல்வம் அணியின் எந்த நிபந்தனைகளும் எங்களை கட்டுப்படுத்த முடியாது. அணிகள் இணைப்பு என்ற கேலிகூத்து நீண்டநாள் நடக்க வாய்ப்பில்லை. தினகரனின் மேலூர் கூட்டத்தால் இரு அணிகளுக்கும் நடுக்கம் ஏற்பட்டுள்ளது. பதவிக்காக விதை நெல்லை விற்க அவர்கள் முடிவு செய்துவீட்டார்கள் என்று தெரிவித்தார்.