ரூ.10 லட்சம் ரூபாய் நன்கொடையை பெப்சி தொழிலாளர்களுக்கு வழங்கிய விஷால்

கலாட்டா டாட்காம் இணைய தளத்தின் சினிமா அவார்டு நிகழ்ச்சி சேத்துபட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நடைபெற்றது. இதில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் மொத்தம் தொகை 10லட்சம் ரூபாய் நன்கொடையாக அளித்தார்கள். இதை கமல் ஹாசன் வழங்க தயாரிப்பாளர் சங்கம் தலைவர் விஷால் பெற்று கொண்ட அதே மேடையில், பெப்சி தலைவர் R.K.செல்வமணியிடம் பெப்சி யூனியனுக்கு நன்கொடையாக அதே 10லட்சம் ரூபாயை வழங்குவதாக அறிவித்தார் விஷால்.