பாதரச மாசை சுத்தப்படுத்துவதில் இருக்கும் இரட்டை வேடத்தை கோடிட்டு காட்டும் இசை காணொளி

சென்னை மற்றும் கொடைக்கானலைச் சேர்ந்த கலைஞர்களும், சமூக ஆர்வலர்களும் ”கொடைக்கானல் ஸ்டில் வோண்ட்” என்ற இசை காணொளியை வெளியிட்டனர். ஆங்கில-டச்சு பன்னாட்டு நிறுவனமான யூனிலீவர், கொடைக்கானல் மலைப் பகுதியில் தான் ஏற்படுத்திய பாதரச மாசை சுத்தம் செய்வதில் கடை பிடிக்கும் இரட்டைத் தரத்தை, ”சுற்றுச்சூழல் இனவாதம்” என்று குறிப்பிடுகிறது, இந்த இசை காணொளி. இக்காணொளியில், ”கொடைக்கானல் வோண்ட்” என்ற பாடலை பாடிய சோஃபியா அஷ்ரஃபும், கர்நாடக இசை, ராப், தமிழ் கானா குத்து ஆகிய இசை வடிவங்களை இணைத்து ஒரு விறுவிறுப்பான பாடலை உருவாக்கியுள்ளனர். இந்த காணொளி கொடைக்கானலில் படமாக்கப்பட்டு, ரத்தீந்திரன் ஆர் பிரசாத் (கொடைக்கானல் வோண்ட், புறம்போக்கு பாடல் ஆகியவற்றை இயக்கியவர்) அவர்களால் இயக்கப்பட்டுள்ளது. ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். காணொளி http:bit.ly/kodaiwont

யூனிலீவர் நிறுவனத்தின் CEO பால் போல்மன் என்பவரை குறி வைத்து Jhatkaa.org தொடங்கியுள்ள மனுவிற்கான கையெழுத்துக்களை சேகரிப்பதற்கான வழிமுறையாக இந்தக் காணொளி உருவாக்கப்பட்டுள்ளது. http:bit.ly/cleanupkodai, இந்த மனுவில் கையெழுத்திட விரும்புபவர்களுக்காக ”மிஸ்டு கால்” இயக்கம் ஒன்றையும் தொடங்கியுள்ளது. இதன் மூலம் +917338730702 என்ற எண்ணுக்கு ”மிஸ்டு கால்” கொடுத்தால் இந்த மனுவில் கையெழுத்திடலாம்.

இந்த இயக்கத்தை மீண்டும் தொடங்குவதற்கான காரணியாக இருந்தது, நவம்பர் 2017-ல் யூனிலீவர் மேற்கொண்ட சுத்திகரிப்பு நடவடிக்கை சோதனை ஓட்டத்தின் தோல்வியே. இந்த சோதனை ஓட்டத்தின் போது தாங்கள் பாதுகாப்புபடுத்தியதைவிட அதிக பாதரசத்தை சுற்றுச்சூழலில் பரப்பியுள்ளனர். இந்நிறுவனம் முன் வைத்துள்ள சுத்திகரிப்பு முறையின் முடிவில், கொடைக்கானலில் மணலில் பிரிட்டிஷ் கூட்டரசு அனுமதித்துள்ள பாதரசத்தின் அளவை விட 20 முறை அதிகமான பாதரசம் இருக்கும் நெதர்லாந்தில் மண், தாவரம் மற்றும் விலங்குகளுக்கு ஏற்புடைய அளவு என்று நிர்ணயித்துள்ள பாதரச அளவை விட 66 முறை அதிக பாதரசம் கொடைக்கானலில் இருக்கும்.

”இப்படியொரு மோசமான சுத்திகரிப்பு முறை ஐரோப்பாவில் என்றுமே அனுமதிக்கப்படமாட்டாது. இந்தியாவில் சிறந்த சுற்றுச்சூழல் தரத்திற்கான சுத்திகரிப்பை மேற்கொள்ள மறுக்கும் யூனிலீவரின் சென்னையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், யூனிலீவர் பொறுப்பெடுக்க வைக்கும் இந்த இயக்கத்தில் 2000-ஆம் ஆண்டிலிருந்து பணியாற்றி வருபவருமான நித்தியானந்த் ஜெயராமன் பேசினார்.

”சுத்திகரிப்பு நடவடிக்கை சோதனை ஓட்டம் தோல்வியடைந்ததன் பிறகும், அதே முறையைக் கொண்டு மொத்த சுத்திகரிப்பையும் மேற்கொள்வதற்கான அனுமதியை யூனிலீவர் பெற்றுள்ளது. அது நடக்கும் பட்சத்தில் ஒரு பெரிய சுற்றுச்சூழல் அழிவிற்கு எந்த வகையிலும் குறையாத ஒன்றாக இது அமைந்து, கொடைக்கானல் வன காப்பகத்தின் நீரகக் காடுகளை விஷமாக்கும்’’ என்றும் அவர் கூறினார்.
சோஃபியா அஷ்ரஃப், டி.எம்.கிருஷ்ணா மற்றும் இயக்குநர் ரத்தீந்திரன் பேசுகையில் இந்த ஆண்டின் பிற்பகுதியில் அவர்கள் நெதர்லாந்து மற்றும் பிரிட்டிஷ் கூட்டரசிற்கு பயணப்பட்டு அங்கிருக்கும் கலைஞர்களுடன் இணைந்து யூனிலீவரின் இரட்டை வேடத்தை டச்சு மற்றும் பிரித்தானிய குடிமக்களுக்கு விளக்கப் போவதாக கூறினார். “யூனிலீவர் தாங்கள் சுற்றுச் சூழலின் பாதுகாவலர்கள் என்பதைப் போன்ற பெரும் பேச்சை எல்லாம் பேசுகிறார்கள். ஐநா சபை 2015 ஆம் ஆண்டு திரு.போல்மந் ஐ “பூமியின் சாம்பியன்’’ என்று அறிவித்தது. தங்கள் வார்த்தையின்படி யூனிலீவர் செயல்பட வேண்டும்’’ என்று கிருஷ்ணா கூறினார்.

”சுற்றுச்சூழல் இனவாதம்’’ என்பது சுற்றுச்சூழல் மாசை விளிம்பு நிலை சமூகங்களின் வாழிடத்தில் சமமற்று பகிர்ந்தளிப்பது. இச்சமூகங்களில் இயங்கும்போது மற்ற இடங்களைக் காட்டிலும் குறைவான சுற்றுச்சூழல் தரம் கொண்டு செயல்படுவது. இந்தக் காணொளியை பேராசிரியர் பாத்திமா பாபு வெளியிட்டார். பிரிட்டிஷ் கூட்டரசின் வேதாந்தா ஸ்டர்லைட் காப்பர் ஸ்மெல்டர்-ன் மாசுபாடுகளுக்கு எதிராக தூத்துக்குடியில் நடந்து வரும் போராட்டத்தில் நீண்ட காலமாக களச் செயல்பாட்டாளராக இருந்து வருகிறார் இவர்.

1983 ஆம் ஆண்டு, யூனிலீவரின் முன்னோடியான சீஸ்ப்ரோ பாண்ட்ஸ் நிறுவனம், நியூயார்கின் வாட்டர் டவுன் பகுதியில் தான் நடத்தி வந்த பாதரச தெர்மாமீட்டர் தொழிற்சாலை மாசுபாடுகளுக்கு அப்பகுதி அரசு மற்றும் ம்க்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் தொழிற்சாலையை அங்கிருந்து வெளியேற்றி கொடைக்கானல் வன காப்பகத்தில், சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைத்தது.

2001 ஆம் ஆண்டு யூனிலீவர் தொழிற்சாலை பாதரசம் அடங்கிய தெர்மாமீட்டர்களை அப்பகுதியில் இருக்கும் பழைய பொருள் கிடங்கில் கொட்டி வைத்திருந்ததற்காக மூடப்பட்டது. பின்னர், தொழிலாளர்கள் உடல் நலன் பாதிக்கப்பட்டிருந்ததும், 1.2 டன் பாதரசம் வனத்திற்குள் கசியவிட்டிருப்பதும் தெரிய வந்தது. 15 ஆண்டுகள் இதைப் பற்றிய பிரச்சாரத்திற்குப் பிறகும், சோஃபியாவின் ராப் பாடல் ஏற்படுத்திய தாக்கம் யூனிலீவர் நிறுவனத்தை தன் தொழிலாளர்களுக்கான இழப்பீட்டை வழங்க வைத்தது.
மேலும் தகவல்களுக்கு, தொடர்பு கொள்க

நித்தியானந் ஜெயராமன் – 9444082401

அர்ச்சனா சேகர் – 9840523235