கரோனா விழிப்புணர்வு பாடல் – ‘பயம் வேண்டாம் தோழா பயம் வேண்டாம்

இசையமைப்பாளர் இனியவன் படைப்பில் உருவாகியிருக்கும் கரோனா விழிப்புணர்வு பாடல் – ‘பயம் வேண்டாம் தோழா பயம் வேண்டாம்’

உலகையே ஸ்தம்பிக்க வைத்து, கண்ணுக்கு தெரியாமல் பெரும் பேரழிவை ஏற்படுத்திவரும் கரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பாடலை, தானே எழுதி, இசையமைத்து பாடியிருக்கிறார் இசையமைப்பாளர் இனியவன்.

‘கௌரி மனோகரி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான இனியவன், தஞ்சை மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர். இசையின் மீது கொண்ட ஆர்வத்தினால், சிறுவயது முதலே பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் கலந்துக் கொண்டவர்.

தனது கடுமையான உழைப்பினால், முதல் படத்திலேயே கவிஞர் வைரமுத்துவுடன் ஒரு தொழில்முறை நெருக்கத்தை எற்படுத்திக் கொண்ட இனியவன், கவிஞர் வைரமுத்து வரிகளில், எஸ். பி. பாலசுப்ரமணியம், கே ஜே யேசுதாஸ், எஸ் ஜானகி, சித்ரா உள்ளிட்ட பல்வேறு பாடகர்களின் குரலில் பல நல்ல பாடல்களை படைத்திருக்கிறார்.

2004ம் ஆண்டு முன்னாள் முதலைமைச்சர் டாக்டர் கலைஞர் முன்னிலையில், கவிஞர் வைரமுத்துவின் ‘கவிதையே பாடலாக – 1’ என்ற பாடல் தொகுப்புக்கு இனியவன் மேடையிலேயே இசையமைத்து பாடல்களை அரங்கேற்றிய விதம் அவருக்குப் பெரும் அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து, 2007ம் ஆண்டு கவிதையே பாடலாக – 2ம் தொகுப்பு மற்றும் அதே ஆண்டில் ‘சுனாமி பாடல் தொகுப்பு’ உள்ளிட்ட படைப்புகள், 2009ம் ஆண்டில் சுதா ரகுநாதன் குரலில், கவிஞர் வைரமுத்து வரிகளில் இவர் வெளியான ‘கல்லறைப் பாடல்’ பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

சுமார் 2000 பாடல்களுக்கு இசையமைத்திருக்கும் இவர், பல்வேறு சர்வதேச இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி இருக்கிறார். இந்த இக்கட்டான ஊரடங்கு நேரத்திலும் கரோனா விழிப்புணர்வு பாடலை, எழுதி, இசையமைத்து, பாடி, பகிர்ந்திருப்பது மிகுந்த வரவேற்புக்கு உரியது.

பாடல் இயற்றியவர் : இனியவன்

இசையமைப்பாளர்

பல்லவி

பயம் வேண்டாம் தோழா பயம்  வேண்டாம்

கொரோனா வந்து துரத்தியடிப்பதால் யாரையும் தொடவெண்டாம்

பயம் வேண்டாம் தோழா பயம்  வேண்டாம்

கொரோனா வந்து துரத்தியடிப்பதால் யாரையும் தொடவெண்டாம்

சத்தம் இல்லாமல் நீயும் எங்களை  தின்றாலும்

மௌனமாகவே நீயும் வந்து  கொன்றாலும்

எங்கள் இரத்தம் மண்ணில் வீழாதே

தமிழன் சத்தம் என்றும் ஓயாதே

பயம் வேண்டாம் தோழா பயம்  வேண்டாம்

தொடவேண்டாம் யாரையும் தொடவேண்டாம்

சரணம் 1

எங்கள் கண்ணிலே மண்ணை தூவிவிட்டு எப்படி வந்தாய் கொரோனா

எங்கள் கண்ணிலே மண்ணை தூவிவிட்டு எப்படி வந்தாய் கொரோனா

பட்ட பாடெல்லாம் பாழாய் போச்சே

என்ன பண்ணபோறோம்  தெரியலையே

செத்த சாவிலே ஒன்னாகூடி

சொல்லி அழவும் வழியில்லையே

மரணம் கொடியது சாமி

மௌனம் காக்குது சாமி

தமிழா தமிழா பயம் வேண்டாம்

சாதிக்கப் பிறந்தவன் நீ

சாதியை ஒழிக்க சரித்திரம் பிறக்க

கொரோனாவை நீ விரட்டி அடி

 

சரணம் – 2

சதியே சதியே பயந்து நடுங்கியே  கண்ணீர் வடிக்குது தேசம்

சதியே சதியே பயந்து நடுங்கியே  கண்ணீர் வடிக்குது தேசம்

அண்டை நாட்டிலே எங்கள் தமிழன்

அழுது புலம்பி தவிக்கிறான்

சொந்த ஊரிலே சோறு இல்லாமல்

தூக்குப்போட்டு சாகிறான்

என்ன பாவம் நாங்கள் செய்தோம் –  இனி

எங்கே போய் நாங்கள் அழுவோம்

ஒடிவிடு நீ ஓடிவிடு

கண்ணுக்கு திெயாமல் ஓடி விடு

வாழவிடு நீ வாழவிடு – எங்கள்

தேசம் காக்க வாழவிடு