தொழில் நுட்பத்தீர்வை இந்திய லாஜிஸ்டிக்ஸ் துறைக்கு கொண்டு வரும் உனானு

போக்குவரத்து தொழில் துறைக்கு சமீபத்திய தகவல் பரிமாற்ற வசதிகள், ஆன்லைனில் பணம் செலுத்தல்கள் மற்றும் வாகன அமைவிடத்தில் கண்டறியும் தொழில் நுட்பங்கள் மீதான சேவைகளை வழங்கி வரும் நிறுவனமான உனானு லாஜிஸ்டிக்ஸ், சென்னை மாநகரிலும் தமிழ்நாட்டில் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் தங்களது செயல் நடவடிக்கையை தொடங்க விருப்பதாக இன்று அறிவித்திருக்கிறது. 2017-ம் ஆண்டில் இந்நிறுவனம் தொடங்கப்பட்டதிலிருந்து நாடெங்கிலுமுள்ள போக்குவரத்து நிறுவனங்களுக்கு வலைதள மற்றும் அலைபேசி (வெப் ரூ மொபைல்) செயல் தளங்கள் வழியாக மிக சமீபத்திய கருவிகளை வழங்குவது மீது மட்டுமே தனிகவனம் செலுத்த வந்திருக்கிறது.

இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் தொழில் துறையானது, சமீபகாலமாக அதிவேக வளர்ச்சியை கண்டுவருகிறது. மாறிவரும் வரிவிதிப்பு, தொழில் மயமாக்கல் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நுழைந்திருப்பது போன்ற பல அம்சங்கள் இந்த வளரச்;சிக்கான காரணிகளாக பங்களிப்பை வழங்கி வருகின்றன. எனினும், சாலை நிலைகள், போதுமான திறன்மிக்க பணியாளர்களும் மற்றும் முறைப்படுத்தப்பட்ட வழங்கல் சங்கிலி (சப்ளைசெயின்) இல்லாத நிலை போன்ற மோசமான உட்கட்டமைப்பு வசதி என்பது இத்தொழில் துறை எதிர்கொள்கிற பலசவால்களுள் ஒன்றாகும். ஒழுங்கு முறைப்படுத்தப்படாத தேவை மேலாண்மை மற்றும் வழங்கல் சங்கிலி என்ற மிகபிரதான சவால்களுள் ஒன்றிற்கு தீர்வுகளை வழங்குவதற்காக உனானு என்ற ட்ரக் அக்ரிகேட்டர் செயலியை (ஆப்) இந்நிறுவனம் சென்னையில் அறிமுகம் செய்திருக்கிறது.

துரமான சரக்குபோக்குவரத்து சேவைகளை வழங்குவதன் மூலம் உனானு, ஷிப்பிங் நிறுவனங்களுக்கு சிறப்பான ஆதாயத்தை வழங்கும். அதன் மறுபக்கத்தில், ஃபிலீட் உரிமையாளர்கள் அவர்களது வாகனத்தின் பயன்பாட்டை திறம்பட நிர்வகிக்கமுடியும். ‘பலநேரங்களில் ட்ரக்குகள் ஃ வாகனத்தை ஒருடிரிப்பை முடித்த பிறகு திரும்ப கொண்டுவருவதற்கான ஆர்டர் கிடைப்பதற்காக பலநாட்கள் ஓரிடத்திலேயே காத்திருக்க வேண்டியிருக்கிறது அல்லுத காலியாக திரும்பவர வேண்டியிருக்கிறது. திரும்பவருவதற்கு சரக்குகளை பெறுவதற்கான செயல்பாட்டில் உனானு சிறப்பான ஆதரவளிக்கும் செயல்தளமாக இருக்கும்,” என்று அவர் மேலும் விளக்கமளித்தார்.

தொழில் நுட்பசாதனங்கள் மற்றும் உத்திகளை பயன்படுத்துகிற லாஜிஸ்டிக்ஸ் செயல்பாடானது, கடந்த சில ஆண்டுகளாக வளர்ச்சியடைந்து வருகிறது. ட்ரக் அக்ரிகேட்டருக்கு டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தீர்வை வழங்குவது, சரக்கு டெலிவரி செய்யப்படும் நிலை, லோடுகளை கண்டறிவது மற்றும் ஓட்டுநருக்கு பணம் வழங்குவது போன்ற செயல் முறைகளை தானியக்க செயல் பாடாக மாற்றும்@ அத்துடன் வாடிக்கையாளரிடமிருந்து சரக்குகளை பெறுவதிலிருந்து அனுப்பப்படும் நபருக்கு அதை எடுத்துச் சென்று வழங்குவது வரை நிகழ்நேர தகவல்களை இது வழங்கும். இந்த செயலி அடிப்படையிலான பிசினஸ், இயக்க செலவுகளையும் மற்றும் தேவையின்றி மேற்கொள்ளப்படும் பயணங்கள் மீதான செலவுகளையும் குறைப்பதன் மூலம், வாகனத்தின் எரிபொருள் திறம்பட பயன்படுத்தப்படுவதை சாத்தியமாக்குகிறது,” என்று ஸ்ரீநி சுந்தர் மேலும் கூறினார்.

Face Book Link : https://m.facebook.com/story.php?story_fbid=2069720523269062&id=1955635541344228

Twitter Link : https://twitter.com/vtv24x7/status/964039724292698112