ஜெயின் சமூகத்தை சேர்ந்த பெண்கள் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இல்லத்தில் அவருக்கு ராக்கி கயிறைக் கட்டி இனிப்புகளை வழங்கி ரக்சா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது தொடர்பாக தனது முகநூலில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள செய்தியில் “சகோதரத்துவத்தின் அடையாளமாக கொண்டாடப்படும் ரக்சா பந்தன் விழாவினை முன்னிட்டு ஜெயின் சகோதரிகள் என்னை சந்தித்து வாழ்த்தினார்கள். நானும் அவர்களுக்கு இனிய ரக்சா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டேன்” என்று கூறியுள்ளார்.