மிரள் விமர்சனம் 3/5

பரத், வாணி போஜன் தங்களது மகனுடன் இரவு நேரத்தில் சொந்த ஊருக்கு குலதெய்வ பூஜைக்காக காரில் பயணம் மேற்கொள்கிறார்கள். காட்டுப்பகுதியில் திடீரென்று கார் பழுதாகி நின்றுவிடுகிறது. ஆள் நடமாட்டமே இல்லாத அந்த இடத்தில் திடீரென்று வரும் ஒருவர், இது ஆபத்தான பகுதி, என்று பரத்தை எச்சரித்துவிட்டு செல்ல, அடுத்த சில நிமிடங்களில் பலவிதமான பிரச்சனைகளும் ஆபத்துகளும் பரத் குடும்பத்திற்கும் ஏற்படுகிறது. அந்த ஆபத்துகள் என்ன? அந்த ஆபத்துகளில் இருந்து பரத்தும், பரத்தின் குடும்பமும் தப்பித்தார்களா என்பதை மிரள் படத்தின் மீதி கதை

நடிகை-நடிகர்கள்:

பரத், வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார், மீரா கிருஷ்ணன், ராஜ்குமார், காவ்யா மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பு : அக்சஸ் பிலிம் பேக்டரி சார்பில் ஜி.டில்லி பாபு
இயக்கம் : எம்.சக்திவேல்
இசை : பிரசாத் எஸ்.என்
ஒளிப்பதிவு : சுரேஷ் பாலா
மக்கள் தொடர்பு : சுரேஷ் சந்திரா, ரேகா D’one