மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் டூயல் 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. டூயல் பிரைமரி கேமரா கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் பிளிப்கார்ட் தளத்தில் ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் மைக்ரோமேக்ஸ் தளத்திலும் ஆஃப்லைன் தளங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மைக்ரோமேக்ஸ் டூயல் சீரிசில் இரட்டை கேமரா அமைப்பு கொண்டுள்ள முதல் ஸ்மார்ட்போன் இது என்பதோடு விரைவில் டூயல் 4 என்ற ஸ்மார்ட்போனும் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மைக்ரோமேக்ஸ் டூயல் 5 ஸ்மார்ட்போனில் 13 எம்பி சோனி IMX258 சென்சார் கொண்ட பிரைமரி கேமராவும், 13 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் புகைப்படங்களை அழகாக எடுக்க ஏதுவாக பல்வேறு கேமரா ஆப்ஷன்களும் இடம் பெற்றுள்ளது. இத்துடன் 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080×1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட சூப்பர் AMOLED 2.5D வளைந்த டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 MSM8976 சிப்செட் மற்றும் 4 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 0.2 நொடிகளில் வேலை செய்யும் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. கைரேகை ஸ்கேனர் மூலம் செல்ஃபி கீ, ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்பட்டுள்ளன.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி வோல்ட்இ, வை-பை, ப்ளூடூத், 3.5 எம்எம் ஆடியோ ஜாக், யுஎஸ்பி டைப்-சி மற்றும் 3200 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இத்துடன் குவிக் சார்ஜ் 3.0 வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 10 நிமிடம் சார்ஜ் செய்து 4 மணி நேரத்திற்கு பேக்கப் பெற முடியும். தொடர்ச்சியாக 45 நிமிடங்கள் சார்ஜ் செய்தால் 95 சதவிகித பேட்டரி சார்ஜ் ஆகும் என மைக்ரோமேக்ஸ் தெரிவித்துள்ளது. இத்தனை சிறப்பம்சங்கள் கொண்டுள்ள மைக்ரோமேக்ஸ் டூயல் 5 ஸ்மார்ட்போனின் விலை ரூ.24,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.