மெர்க்குரி திரைவிமர்சனம்

 

மேயாத மான் படத்தில் நடித்த இந்துஜா, தீபன், ஷசாங்க், அனீஷ், கஜராஜ் நண்பர்களாக சந்தோசமாக வாழ்வதில் ஆரம்பமாகிறது மெர்க்குரி.  ஒரு நாள் இவர்கள் இரவில் வெளியே செல்லும்போது வழியே ஒரு சடலம் கிடக்கிறது. அந்த சடலத்தை புதைக்கிறார்கள்.  தொலைந்த பொருளை தேடுவதற்கு அதே இடத்திற்கு மீண்டும் போகும்போது புதைத்த இடத்தில் சடலத்தை காணாமல் அதிர்ச்சி அடைகின்றனர். 

இதற்கிடையில் இந்துஜாவும் காணாமல் போகிறார். நண்பர்கள் நால்வரும் இவர்களை தேடி செல்லும் போது கொலை செய்யப்படுகிறார்கள். கொலை செய்யப்படுவதற்கான காரணம் என்ன? கொன்றது யார்? இந்துஜா என்ன ஆனார்? என்பதே மெர்க்குரி படத்தின் மீதி கதை. பிரபுதேவா கண் பார்வையற்றவராக, பார்த்தால் பயம் வரும் கதாபாத்திரத்தில் அருமையாக நடித்துள்ளார் இந்த படத்தில் வசனங்களே இல்லை என்பதுதான் ஹைலைட்.

நடிகர்கள் : பிரபுதேவா, இந்துஜா, ரம்யா நம்பீசன், சனத் ரெட்டி, தீபன், ஷசாங்க், அனீஷ், கஜராஜ் மற்றும் பலர்

இயக்கம் : கார்த்திக் சுப்பராஜ்

இசை : சந்தோஷ் நாராயணன்

ஒளிப்பதிவு : திரு

எடிட்டிங் : விவேக் ஹர்சன்

தயாரிப்பு : பென் மூவீஸ்

மக்கள் தொடர்பு : நிகில் முருகன்

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்