மெர்சிடஸ் பென்ஸின் புதிய கார் அறிமுகம்

மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நியூ இ-கிளாஸ் என்ற புதிய காரை சென்னையில் அறிமுகம் செய்தது. இக்காரானது நீளமான சக்கரத்தைக் கொண்டது. வலது பக்கம் ஓட்டும் வசதியைக் கொண்டது. இது முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. புதிய இ-கிளாஸ் காரானது 10வது தலைமுறையைச் சார்ந்ததாகும். இப்புதிய வகை காரை இந்திய நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்பிரிவு துணைத்தலைவர் மைக்கேல் ஜோப் அறிமுகம் செய்தார்.