மீசைய முறுக்கு திரைவிமர்சனம்

அப்பா விவேக், அம்மா விஜயலட்சுமி, தம்பி அனந்த்ராமுடன்  நாயகன் ஹிப்ஹாப் தமிழா ஆதி கோவையில் வாழ்ந்து வருகிறார். விவேக் மற்றும் விஜயலட்சுமி கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றனர். பாரதியாரின் தீவிர பக்தரான விவேக் தமிழ் மொழியின் மீது அதீத ஈடுபாடு உடையவர். விவேக்கின் இந்த பற்று, ஆதியையும் தமிழின் மீது ஈடுபாடுடையவராக மாற்றுகிறது. இதையடுத்து பாரதியாரின் கவிதைகள் உள்ளிட்ட தமிழ் புத்தகங்களை படிக்க ஆரம்பிக்கிறார். ஆதியும், விக்னேஷும் சிறுவயது முதலே நெருங்கிய நண்பர்களாக இருந்து வருகின்றனர். ஆதிக்கு சிறவயதிலேயே இசை மீது ஈர்ப்பு இருப்பதை அறிந்த விவேக், ஆதிக்கு ஒரு கீ-போர்டை பரிசாக வழங்குகிறார்.

அதுமுதல் ஆதி – விக்னேஷ் இருவருமே அந்த கீ-போர்டு இல்லாமல் இருப்பதில்லை. இவர்களுடைய இசைப்பயணம் இதுமுதல் ஆரம்பமாகிறது.  இதுஒருபுறம் இருக்க, தன்னுடன் பள்ளியில் படித்து வரும் ஆத்மிகா மீது ஆதிக்கு ஈர்ப்பு வருகிறது. இந்நிலையில், ஆத்மிகா வேறு பள்ளிக்கு சென்று விடுகிறார். வெகுநாட்களாக ஆத்மிகாவை சந்திக்காத ஆதி, தனது பள்ளிப்பருவத்தை முடிக்கும் நிலையில் ஆத்மிகாவை மீண்டும் சந்திக்கிறார். பின்னர் ஆத்மிகா மீது இருந்த ஈர்ப்பு, காதலாக மாறுகிறது. தனது பள்ளிப் படிப்பை முடிக்கும் தருணத்தில் தனது விருப்பத்தை ஆத்மிகாவிடம் தெரிவிக்க முயற்சி செய்கிறார். இந்நிலையில் ஆதி, ஆத்மிகா பின்னால் சுற்றுவதற்கு அந்த பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்து சண்டை பிடிக்க, இந்த பிரச்சனை காவல் நிலையம் வரை செல்கிறது. இதையடுத்து ஆதி வீட்டில் இருந்தால் மேலும் ஏதாவது பிரச்சனை கிளம்பும் என்பதால், ஆதியை கல்லூரி விடுதியிலேயே சேர்த்து விடுகிறார் விவேக். ஆதியின் நண்பன் விக்னேஷும் அதே கல்லூரியிலேயே சேர்கிறார்.

இந்நிலையில், அதே கல்லூரியில் படித்து வரும் ஆத்மிகாவை பார்க்கும் ஆதிக்கு சந்தோஷத்தின் உச்சத்திற்கு செல்கிறார். பின்னர் இவர்களது ஈர்ப்பு அதிகமாகி, பின்னர் அது காதலாகவும் மாறிவிடுகிறது.  இதனுடன் தனது இசை ஆர்வத்தையும் வளர்த்து வரும் ஆதி, பல்வேறு கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். பின்னர் கல்லூரி படிப்பை முடிக்கும் போது, ஆதியின் வாழ்க்கை குறித்து விவேக் கேட்கும் போது, சென்னை சென்று தான் இண்டிபெண்டன்ட் இசையில் சாதிக்க வேண்டும் என்று கூறுகிறார்.

ஆதியின் முடிவுக்கு விவேக் முதலில் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஆதியின் ஆசைப்படி செல்ல அனுமதிக்கும் விவேக், ஆதிக்கு ஒரு வருடமே அவகாசம் அளிக்கிறார். அந்த ஒரு வருடத்தில் இசையில் வெற்றி பெறாவிட்டால் தனது விருப்பப்படி மேற்படிப்பு படிக்க வேண்டும் என்கிறார் விவேக். இந்நிலையில், சென்னை வரும் ஆதி, என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தார்? எப்படி வெற்றி பெற்றார்? அவரது காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்