சென்னை பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் பிரபல நடிகை ரித்திகா சிங் துவக்கி வைத்த காலணித் திருவிழா 2024’

சென்னை பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் ‘காலணித் திருவிழா 2024’:
பிரபல நடிகை ரித்திகா சிங் துவக்கி வைத்தார்

சென்னை, ஜனவரி 6, 2024:சென்னையில் உள்ள பிரீமியம் மால்களில் ஒன்றான பீனிக்ஸ் மார்க்கெட்சிட்டியில் ‘காலணித் திருவிழா 2024’ என்னும் நிகழ்ச்சியை பிரபல நடிகையும் தற்காப்பு கலைஞருமான ரித்திகா சிங் இன்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் மாலில் கூடியிருந்த மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு கையசைத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்த அவர் அங்குள்ள பல்வேறு கடைகளுக்கு சென்று கடை உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுடன் பேசினார். அவரது வருகையால் அந்த கடையின் உரிமையாளர்களும், விற்பனையாளர்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் நைக், ரீபோக், பூமா, அடிடாஸ், ஸ்கெச்சர்ஸ், லைப் ஸ்டைல், கிளார்க்ஸ், ஹஷ் பப்பீஸ், டீசல், ஆல்டோ, பாட்டா, ஐஎன்சி 5, மோச்சி, சார்லஸ் & கீத், பேலெஸ், மெட்ரோ, ஜாக் & ஜோன்ஸ், அர்மானி எக்ஸ்சேஞ்ச், ஆசிக்ஸ், ஷாப்பர் ஸ்டாப், தி கலெக்டிவ், எச்&எம் மற்றும் பாரெவர் உள்ளிட்ட 21 பிராண்டுகள் உள்ளன. இந்த ஷாப்பிங் திருவிழாவையொட்டி ஜனவரி 11-ந்தேதி வரை இந்த பிராண்டுகள் 50 சதவீத வரை தள்ளுபடி வழங்குகின்றன.

காலணித் திருவிழா 2024 நிகழ்ச்சியில் ஏராளமான பேர் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற இளைஞர்கள் தங்களுக்கு விருப்பமான நைக், பூமா, அடிடாஸ் உள்ளிட்ட பிராண்டுகளின் ஷூக்கள் மற்றும் காலணிகளை வாங்கினார்கள். 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளதால் அவர்களுக்கு விருப்பமான காலணிகளை தேர்வு செய்து வாங்கினார்கள். இந்த நிகழ்ச்சி புது விதமான காலணிகளை அதிகம் விரும்புபவர்களுக்கும் பல்வேறு பிரீமியம் பிராண்டுகளை குறைந்த விலையில் வாங்க விரும்புபவர்களுக்கும் ஒரு சிறப்பான பிரத்யேக ஷாப்பிங் திருவிழாவாக இருக்கும் என்று பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி தெரிவித்துள்ளது. இந்த ஷாப்பிங் திருவிழா சென்னை பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டியில் வரும் 11-ந்தேதி வரை நடைபெறுகிறது.

பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி பற்ற: பீனிக்ஸ் மில்ஸ் நிறுவனம், சில்லறை வர்த்தகம் சார்ந்த மால்களை துவக்கி சொத்துக்களை மேம்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் உள்ள மால்களில் தனக்கென ஒரு தனியிடத்தை பிடித்துள்ள பீனிக்ஸ் மால்களில் மக்கள் ஷாப்பிங் செய்வதற்கான அனைத்து பிராண்ட் நிறுவனங்களும், சாப்பிடுவதற்கான ஓட்டல்களும், பொழுது போக்குவதற்கான தியேட்டர்களும், பல்வேறு கேளிக்கை நிகழ்ச்சிகளும் இடம் பெறுகின்றன. மும்பை, புனே, சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய இடங்களில் பீனிக்ஸ் மால்கள் உள்ளன.