தூத்துக்குடி மாவட்ட மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் 9வது மாவட்ட மாநாடு கோவில்பட்டி கதிரேசன் கோவில் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று தொடங்கியது. 2 நாள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல்நிகழ்ச்சியாக கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமரவேல் கட்சி கொடியேற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் அஞ்சலி தீர்மானத்தினை வாசித்தார். தொடர்ந்து மாநாட்டிற்கு வந்திருந்தவர்களை மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் சின்னதம்பி வரவேற்று பேசினார். மாவட்ட செயலாளர் அர்ஜீனன் அரசியல் ஸ்தாபக அறிக்கையை வசித்தார். தொடர்ந்து மத்தியக்குழு உறுப்பினர் சம்பத் மாநாட்டு தொடக்கவுரையை நிகழ்த்தினார்.
மாநிலக்குழு உறுப்பினர்கள் கனகராஜ்,மல்லிகா, நகர செயலாளர் முருகன், ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர். முன்னதாக மந்திதோப்பு சாலையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சி கொடியை மாநிலக்குழு உறுப்பினர் மல்லிகா ஏற்றிவைத்து, தொடர் ஜோதி ஓட்டத்தினை தொடங்கிவைத்தார். ஜோதிபாசு தலைமையில் கட்சி தொண்டர்கள் மாநாடு நடைபெறும் இடம் வரை கொண்டு வந்து மாநாட்டு திடலில் ஜோதியை ஏற்றினர். 2ம்நாள நிகழ்ச்சியாக மத்தியக்குழு உறுப்பினரும் எம்.பியுமான ரெங்கராஜன் மாநாட்டு வாழ்;த்துரை வழங்குகிறார். மாநிலக்குழு உறுப்பினர் கனகராஜ் மாநாட்டு நிறைவுரை வழங்குகிறார். ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு நன்றியுரை வழங்கவுள்ளார்.