மரகத நாணயம் – சினிமா விமர்சனம்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இரும்புரை என்ற சிற்றரசன், தன்னைவிட அதிக பலம்வாய்ந்த அரசு தன்னை நோக்கி போர் தொடுக்கும்வேளையில், அதை எதிர்கொள்ள தியானம் செய்து ஒரு மரகதநாணயத்தை வரமாக பெறுகிறார். அந்த மரகத நாணயத்தை தன் வாளில் பதித்துக் கொண்டு எதிரிகளிடம் போரிட்டு வெற்றியும் அடைகிறார்.  மரகத நாணயம் அவர் கைவசம் வந்ததிலிருந்து அவருக்கு வெற்றிகளை குவிகின்றன. இதனால், மரகத நாணயத்தை யாரிடம் ஒப்படைக்காமல் இறுதிவரை தன் வசமே வைத்திருக்கிறார். 90-வயதில் இறக்கும் தருவாயில் அந்த மரகத நாணயத்தை தன்னுடனே வைத்து உயிருடன் ஜீவசமாதி அடைகிறார். 

இந்நிலையில் 1990-ஆண்டில் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஒருவர் அந்த மரகத நாணயத்தை தேடி கண்டுபிடித்து தோண்டி எடுக்கிறார். அந்த நாணயத்தை யாரெல்லாம் தொடுகிறார்களோ, அவர்களெல்லாம் வண்டியில் அடிபட்டு இறக்கிறார்கள். இதனால், அந்த நாணயத்தை இரும்புரை அரசனின் ஆவிதான் யார் கைக்கும் கிடைக்காதபடி பாதுகாத்து வருவதாக ஒரு பேச்சு இருக்கிறது. இதையடுத்து கதை நிகழ்காலத்திற்கு வருகிறது. நாயகன் ஆதி 40 லட்சம் கடனுடன், ஏதாவது கடத்தல் தொழில் செய்து பெரிய ஆளாக வேண்டும் என்ற நினைப்புடன் நண்பன் டேனியுடன் சென்னையில் தங்கியிருக்கிறார். கடத்தல் தொழில் செய்துவரும் ராம்தாஸுடன் ஆதியை சேர்த்துவிட்டு, கடத்தல் பணிகளை செய்து வருகிறார்கள்.

ஒருகட்டத்தில் ராம்தாஸ் செய்வதெல்லாம் சிறு சிறு கடத்தல் வேலைகள்தான், இவரிடம் வேலை பார்த்தால் தன்னுடைய கடனை கூடிய சீக்கிரத்தில் அடைக்க முடியாத என நினைக்கும் ஆதி, பெரிய கடத்தல் ஏதாவது செய்யவேண்டும் என்ற வெறியுடன் இருக்கிறார். இந்நிலையில், சீனாவில் இருந்து மரகத நாணயத்தை தேடி ஒருவன் சென்னைக்கு வருகிறான். மைம் கோபி மூலமாக அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார்கள். அந்த மரகத நாணயத்தை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.10 கோடி கொடுப்பதாகவும் கூறுகிறார்கள்.

ஆனால், மரகத நாணயத்தின் வரலாறு பற்றி அனைவருக்கும் தெரிந்திருப்பதால் யாரும் அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடிக்க முன் வருவதில்லை. இந்த விஷயம் ஆதிக்கு தெரியவர, அந்த மரகத நாணயத்தை தேடிக் கண்டுபிடித்துக் கொடுத்தால் வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று நினைத்து, அதை தேடிக்கண்டுபிடித்து தருவதாக முன்வருகிறார். ஆதி இந்த முடிவை எடுத்ததும் அவருக்கு நிறைய கெட்ட சகுனங்கள் குறுக்கிடுகிறது. இதையெல்லாம் மீறி ஆதி, மரகத நாணயத்தை கண்டுபிடித்தாரா? அந்த மரகத நாணயத்தால் இவருக்கு என்ன பலன் கிடைத்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்