மம்மட்டியான் ஸ்டார்ஸ் விமர்சனம்

சவிர் சுதாகர் இயக்கத்தில், வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன் மற்றும் விவேக் பிரசன்னா  மற்றும் பல நடிப்பு சீசையணையத்தில் வெளியாகியுள்ள தொடர் மம்மட்டியான் ஸ்டார்ஸ்.

ஒரு கிராமத்தைச் சேர்ந்த வைபவ் முருகேசன், வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக் மூன்று இளைஞர்களும், லாவண்யாவும், தங்களின் விருப்பமான கிரிக்கெட் நட்சத்திரமான எம்.எஸ்.ஆர்.-இன் கடைசி சர்வதேசப் போட்டியை சென்னையில் நேரில் காண வேண்டும் என்ற கனவை மனதில் வைத்துள்ளனர். ஆனால், டிக்கெட் வாங்க பணம் இல்லாததால் கிரிக்கெட் தொடரில் கலந்து கொண்டு பரிசுத் தொகையை வெல்ல முயற்சிக்கிறார்கள். எதிர்பாராத சூழ்நிலையால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய பணத்தை எடுத்துக் கொண்டு சென்னை செல்கிறார்கள்.

சென்னையில் மோசடி காரணமாக பணத்தையும் டிக்கெட்டையும் இழந்த அவர்கள், பணத்திற்காக சட்டவிரோத கிரிக்கெட் பெட்டிங் மற்றும் பிக்சிங் கும்பலின் வலையில் சிக்குகிறார்கள். அங்கிருந்து தப்பித்து, தங்களின் கனவை நிறைவேற்றினார்களா? அவர்களின் நட்பும் வாழ்க்கையும் என்ன ஆனது? என்பதையே இந்த 6 எபிசோடுகள் கொண்ட தொடரின் விறுவிறுப்பான கதை வெளிப்படுத்துகிறது.

வைபவ் முருகேசன் கதையின் நாயகனாக இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி, நகைச்சுவை மற்றும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார்.

லாவண்யா அன்பழகன் தனது கதாபாத்திரத்திற்கு தேவையான தன்னம்பிக்கை மற்றும் எளிமையை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

வெங்கட பாலமுரளி, ஜகபர் சாதிக் ஆகியோர் நண்பர்களின் கெமிஸ்ட்ரியை இயல்பாக கொண்டு சென்று கதைக்கு வலு சேர்க்கிறார்கள்.

விவேக் பிரசன்னா தோன்றும் காட்சிகளில் விறுவிறுப்பை கூட்டி, தனது கதாபாத்திரத்தை சிறப்பாக கையாண்டுள்ளார்.

சவிர் சுதாகர், நவீன் ராஜ்குமார், கலை செல்வன் மற்றும் வினு கார்த்திகேயன் ஆகியோரின் திரைக்கதை நட்பு, கிரிக்கெட் மீதான ஆர்வம் மற்றும் சாகசத்தை சுவாரஸ்யமாக இணைக்கிறது.

பி.எம். ராஜ்குமாரின் ஒளிப்பதிவு கிராமப்புற சூழலையும் சென்னை நகரின் பரபரப்பையும் அழகாக பதிவு செய்கிறது.

பவித்ரனின் படத்தொகுப்பு ஆறு எபிசோடுகளிலும் வேகத்தை குறையாமல் கொண்டு செல்கிறது.

தமிழ்செல்வனின் கலை இயக்கம் கிரிக்கெட் மைதானங்கள், தெருக்கள் மற்றும் கதைக்குத் தேவையான இடங்களை நம்பகத்தன்மையுடன் உருவாக்கி, தொடரின் தரத்தை உயர்த்தியுள்ளது.