திருவள்ளூரில் மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் புதிய ஷோரூம் ஆரம்பம்

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் தமிழ்நாட்டில் தொடர் விரிவாக்கப் பயணத்தில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ள இந்த ஷோரூமை, பிரபல திரைப்பட நடிகையும், பாடகியுமான ஸ்ரீமதி. ஸ்ருதி ஹாசன் திறந்து வைத்தார்.

திருவள்ளூர், நவம்பர் 21, 2026: உலகளவில் நான்காவது மிகப்பெரிய நகை விற்பனை நிறுவனமான மலபார் கோல்டு & டைமண்ட்ஸ், திருவள்ளூரில் தனது புதிய ஷோரூமைத் தொடங்கியிருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாடு மாநிலத்தில் தனது சில்லறை விற்பனைக் கட்டமைப்பை இந்த பிராண்ட் மேலும் வலுப்படுத்தியுள்ளது. திருவள்ளூர் ஜே.என். சாலையில் அமைந்துள்ள ஐஆர்என் மஹால் கட்டிடத்தில், 15,300 சதுர அடி பரப்பளவில் இரண்டு தளங்களில் இந்த ஷோரூம் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது. உயர்தரமான தங்க மற்றும் வைர ஆபரணங்களின் விரிவான கலெக்ஷனைக் கொண்டிருக்கும் இந்த ஷோரூம், நகை வாங்கும் அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமானதாகவும், இனிதானதாகவும் ஆக்குவதை தனது இலக்காகக் கொண்டிருக்கிறது.

பிரபல திரைப்பட நடிகையும் பாடகியுமான ஸ்ருதி ஹாசன், [மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகள் மற்றும் குழுவினர்] முன்னிலையில் இந்தப் புதிய ஷோரூமைத் திறந்து வைத்தார்.

இவ்விழாவில் பேசிய மலபார் குழுமத்தின் தலைவர் திரு. M. P. அகமது, “தமிழ்நாட்டில் எங்களது 38-வது ஆபரண ஷோரூம் திறக்கப்படுவது எமது பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். மாநிலம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்கள் எங்கள் மீது வைத்துள்ள ஆழமான நம்பிக்கையையும், அன்பையும் இது பிரதிபலிக்கிறது. தமிழ்நாடு வளமான நகைப் பாரம்பரியத்தையும், தங்க ஆபரணங்கள் மீது ஆழமான பற்றையும் கொண்ட மாநிலமாகும்; இது இம்மாநிலத்துடனான எங்களது நீண்டகாலப் பிணைப்பை மேலும் வலுப்படுத்துகிறது. நேர்த்தியான வடிவமைப்புகளில் உயர்தர ஆபரணங்களை வழங்குவது என்ற குறிக்கோளுக்கும் கூடுதலாக, மிக விரிவான தேர்வு, நம்பிக்கை மற்றும் மனநிறைவு ஆகியவற்றை மையமாகக் கொண்ட அனுபவத்தின் மூலம் வாடிக்கையாளர்களுடன் நீடித்த உறவுகளை உருவாக்குவதே எங்களது நோக்கமாக எப்போதும் இருந்து வருகிறது. திருவள்ளூரில் திறக்கப்பட்டுள்ள எங்களது புதிய ஷோரூம் மூலம், பிரம்மாண்டமான மணப்பெண்ணுக்கான ஆபரணங்கள் மற்றும் பாரம்பரிய வடிவமைப்புகள் முதல் நவீன மற்றும் அன்றாடப் பயன்பாட்டு நகைகள் வரையிலான விரிவான நகைத் தொகுப்புகளை இப்பகுதியில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிக அருகில் நாங்கள் கொண்டு வருகிறோம்,” என்றார்.

தனித்துவமான உள் அலங்கார வடிவமைப்பு, மணப்பெண்ணுக்கான பிரத்யேக நகைப் பிரிவு, நகை விற்பனைப் பிரிவுகள் மற்றும் மலபார் கோல்டு & டைமண்ட்ஸின் முத்திரைப் பதித்த துணை பிராண்டுகள் ஆகியவை இந்த ஷோரூமில் இடம்பெற்றுள்ளன:

இந்தியப் பாரம்பரியத்தால் உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்ட ஆபரணக் கலெக்ஷன்களை ‘டிவைன்’ காட்சிப்படுத்துகிறது; கைவினைக் கலைஞர்களால் நுணுக்கமாக உருவாக்கப்பட்ட நகைகளை ‘எத்னிக்ஸ்’ வழங்குகிறது. ‘மைன் டைமண்ட்ஸ்’ நேர்த்தியான வைர நகைகளையும், ‘பிரீசியா’ விலைமதிப்பற்ற நவரத்தின நகைகளையும், ‘ஏரா’ (ERA) அன்கட் வைர நகைகளையும் சிறப்பாகக் கொண்டுள்ளன. மேலும், அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற நவீன வடிவமைப்புகளைக் கொண்ட பிராண்டின் பிரத்யேகத் தொகுப்பான ‘சோல்’ நகைகளும் இந்த ஷோரூமில் இடம்பெற்றுள்ளன.

பாரம்பரிய மணப்பெண் ஆபரணங்கள் முதல் நவீன அன்றாட ஸ்டைல்கள் வரை, வாடிக்கையாளர்களின் பல்வேறு ரசனைகள், சிறப்பு நிகழ்வுகள் மற்றும் நகை வாங்கும் தேவைகளை இந்த விரிவான ஆபரணக் கலெக்ஷன்கள் சிறப்பாகப் பூர்த்தி செய்கின்றன.

திறப்பு விழாச் சிறப்புச் சலுகைகள்: புதிய ஷோரூம் திறப்பு விழாவை முன்னிட்டு, நவம்பர் 30, 2026 வரை வாடிக்கையாளர்களுக்குச் சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 2 கிராம் அல்லது அதற்கு மேற்பட்ட நிகர எடையுள்ள தங்க நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 1 கிராம் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படும். 1 கிராம் நிகர எடையுள்ள அன்கட் அல்லது நவரத்தின நகைகள் வாங்கும் ஒவ்வொரு முறையும் 1 கிராம் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படும். ₹30,000 அல்லது அதற்கு மேல் மதிப்புள்ள வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 கிராம் வெள்ளி நாணயம் இலவசமாக வழங்கப்படும். நிபந்தனைகளுக்கு உட்பட்டது.

பொறுப்புள்ள சில்லறை விற்பனை நடைமுறைகளுக்கான தனது உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தும் விதமாக, வெளிப்படையான விலை நிர்ணயம், உத்தரவாதமான திரும்பப் பெறும் மதிப்பு, மற்றும் தரம் மற்றும் தூய்மைக்கான உத்தரவாதங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய தனது ‘மலபார் வாக்குறுதிகளை’ மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது. HUID-ஹால்மார்க் முத்திரை பதித்த தங்க நகைகள் மற்றும் பரிசோதிக்கப்பட்டு சான்றளிக்கப்பட்ட வைர நகைகள் மூலம் வெளிப்படைத்தன்மை மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையின் மீது இந்த பிராண்ட் கொண்டிருக்கும் அக்கறையும், அர்ப்பணிப்பும் மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.

மலபார் கோல்டு & டைமண்ட்ஸ் குறித்து:

1993-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ‘மலபார் கோல்டு & டைமண்ட்ஸ்’ நிறுவனம், இந்தியாவின் முன்னணி பன்முக வணிகக் கூட்டமைப்பான மலபார் குழுமத்தின் முதன்மை நிறுவனமாகும். ஆண்டு விற்றுமுதலாக 9.46 பில்லியன் யுஎஸ் டாலர் கொண்ட இந்நிறுவனம், தற்போது ஆபரண சில்லறை விற்பனையில் உலகத் தரவரிசையில் நான்காவது மிகப்பெரிய நிறுவனமாகத் திகழ்கிறது. இந்நிறுவனம் 14 நாடுகளில் 450-க்கும் மேற்பட்ட ஷோரூம்களுடன் வலுவான விற்பனை வலையமைப்புடன் இயங்குகிறது. மேலும்; இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், தூர கிழக்கு நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இதன் அலுவலகங்கள், வடிவமைப்பு மையங்கள், மொத்த விற்பனைப் பிரிவுகள் மற்றும் ஆபரண உற்பத்தி ஆலைகளும் செயல்பட்டு வருகின்றன. 3,000-க்கும் மேற்பட்ட பங்குதாரர்களைக் கொண்டுள்ள இக்குழுமத்தில், 26-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 30,000-க்கும் மேற்பட்ட தொழில்முறை வல்லுநர்கள் இதன் தொடர்ச்சியான வளர்ச்சிக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றி வருகின்றனர்.