மகா விமர்சனம் 2.5/5

பைலட்டாக இருக்கும் சிம்புவும் விமானப்பணிப்பெண்ணான ஹன்சிகாவும் காதலர்கள். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை (மானஸ்வி) இருக்கிறாள். எட்டு வயது பெண் குழந்தை காணாமல் போக, சில நாட்களில் கொடூரமாக கொலை செய்யப்பட்டு அந்த குழந்தையின் சடலத்தை மீட்கும் போலீஸ் அதிகாரி ஸ்ரீகாந்த் விசாரணையை தொடங்குகிறார். பல கோணங்களில் விசாராணை நடந்து கொண்டிருக்க, ஹன்சிகாவின் குழந்தையும் காணாமல் போகிறது. இதனால் ஹன்சிகா போலீசில் புகார் கொடுத்து. குழந்தையை மீட்குமாறு கெஞ்சுகிறார். ஆனால் எந்த பயனும் இல்லாததால், விரக்தி அடைகிறார். இதனிடையே போலீஸ்காரர் தம்பி ராமையாவின் பேத்தியும் கடத்தப்படுகிறார். போலீசிற்கு செல்லும் தகவல்களை உடனுக்குடன் அறிந்து முன்னெச்சிரிக்கையாக தப்பிக்கும் சைகோ கொலையாளி யார்? கொடூரமாக குழந்தைகளளை கொல்ல காரணம் என்ன? இறுதியில் கொலையாளியை யார் கண்டுபிடித்து பழி வாங்குகிறார்கள்? என்பதுதான் படத்தோட மீதிக்கதை.

நடிகை-நடிகர்கள்:

சிம்பு, ஹன்சிகா, குழந்தை மானஸ்வி, மகத், ஸ்ரீகாந்த், தம்பி ராமையா, கருணாகரன், பழைய ஜோக் தங்கதுரை மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

இயக்கம்: UR ஜமீல்
தயாரிப்பு: மதியழகன்
இசை: ஜிப்ரான்
பாடல்கள்: மதன் கார்க்கி, விவேகா சௌந்தர்ராஜன்
ஒளிப்பதிவு-லக்ஷ்மன்
பிஆர்ஒ-சுரேஷ் சந்திரா.