மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு விருது

தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றம் சார்பாக நடைபெற்ற குடியரசு தின விழாவில் தென் தமிழகத்தின் சிறந்த மருத்துவமனையாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது

நாட்டின் 73 ஆவது குடியரசு தினம் நாடு முழுவதிலும் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டுவருகிறது. சென்னை அடையாரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றத்தின் சார்பாக அதன் நிர்வாகிகள் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடினர்.

சென்னை அடையாறில் உள்ள இளைஞர் விடுதி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றத்தின் மாநில தலைவர் நாகராஜன் நமது தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இதில், திரைப்பட இயக்குனர் பாரதி கணேஷ், சமூக ஆர்வலர் பசுமை மூர்த்தி, போரூர் மக்கள் நல்வாழ்வு சங்க தலைவர் போரூர் ஜனார்த்தனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

தொடர்ந்து தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றத்தில் உறுப்பினர்களாக இணைந்தவர்களுக்கு மன்றத்தின் மாநில தலைவர் நாகராஜன் நியமன கடிதத்தையும், உறுப்பினர் அடையாள அட்டையையும் வழங்கினார்.

இதில், தென் தமிழகத்தின் சிறந்த மருத்துவமனையாக மதுரையில் உள்ள மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

தொடர்ந்து, பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு விருது வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தென்னிந்திய பத்திரிக்கையாளர் மன்றத்தின் மாநில பொதுச்செயலாளர் ஷைன் ராஜகுமார், மாநில இணை செயலாளர்கள் பேராசிரியர் ராஜா, ரவிச்சந்திரன், கமலேஸ்வரன், மாநில துணை தலைவர்கள் சுந்தர், குருசாமி, சரண்குமார், துணை பொதுச்செயலாளர்கள் சுவன், வேல்முருவன், செல்வராஜ், மாநில துணை ஒருங்கிணைப்பாளர்கள் நடிகை கௌரி சிந்து, கோபிநாத், பவானி, மாநில அமைப்பாளர்கள் பிரபு, கருணாகரன் உள்ளிட்ட மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.