லவ்வர் விமர்சனம்

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் & எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் சார்பில், நஸிரத் பசியிலியன், மகேஷ் ராஜ் பஸ்லியன், யுவராஜ் கணேசன் தயாரிப்பில், சக்தி பிலிம் பேக்டரி வெளியீட்டில், அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கத்தில், மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, கலைமாமணி சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா ஷங்கர், ரிணி, அருணாச்சலேஸ்வரன் ஆகியோர்நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் லவ்வர்.

நாயகன் மணிகண்டனும் நாயகி ஸ்ரீ கௌரி பிரியாவும் ஆறு வருடமாக காதலிக்கிறார்கள். சின்ன சின்ன சண்டைகள் அவர்களுக்குள் அடிக்கடி ஏற்பட்டு அவ்வப்போது சரியாகிவிடுகிறது.

தன் வீட்டுக்கு ஒரு முறை ஸ்ரீ கௌரி பிரியாவை அழைத்துச் செல்கிறார் மணிகண்டன். அங்கு மணிகண்டனின் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் சண்டை நடக்கிறது. அதை பார்த்த ஸ்ரீ கௌரி பிரியா அதிர்ச்சியாகிறார்.

மணிகண்டன் மீது வெறுப்பில் இருக்கும் ஸ்ரீ கௌரி பிரியாவிற்கு மணிகண்டனின் குடும்பத்திலும் பிரச்சினை இருப்பதைக் கண்டு பயப்படுகிறார்.

ஒரு சூழ்நிலையில் மணிகண்டனை விட்டு பிரிய முடிவு எடுத்து பிரேக்கப் பண்ணிக்கலாம் என்று சொல்கிறாளர் ஸ்ரீ கௌரி பிரியா. மணிகண்டனால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை மீண்டும் மீண்டும் ஸ்ரீ கௌரி பிரியாவை சந்தித்து மன்னிப்பு கேட்டு காதலை ஏற்றுக் கொள்ளும்படி கெஞ்சுகிறார். ஏற்க மறுத்தால் சாகப்போவதாக மிரட்டுகிறார்.

ஒரு கட்டத்தில் ஸ்ரீ கௌரி பிரியா நீ கூட உன் அப்பா போல தான் இருக்கிறாய் என்று திட்டி விடுகிறார். அதனால் மனம் உடைந்த மணிகண்டன் அவளை விட்டு பிரிந்து போகிறார்.

வருடங்கள் பல செல்கின்றன வேலையில்லாமல் இருந்த மணிகண்டன் காபி ஷாப் ஒன்றை சொந்தமாக தொடங்கி உயர்வடைகிறார். மணிகண்டன் நடத்தும் காபி ஷாப் என்று தெரியாமல் ஸ்ரீ கௌரி பிரியா அங்கு வருகிறார்.
ஸ்ரீ கௌரி பிரியாவை கண்டதும் மணிகண்டன் என்ன செய்கிறார்? மீண்டும் காதலுக்காக கெஞ்சுகிறாரா? இல்லை கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா? என்பதே லவ்வர் படத்தோட மீதி கதை.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இயக்குனர் : பிரபு ராம் வியாஸ்

ஒளிப்பதிவு : ஸ்ரேயஸ் கிருஷ்ணா

இசை : ஷான் ரோல்டன்

படத்தொகுப்பு : பரத் விக்ரமன்

மக்கள் தொடர்பு : யுவராஜ்