`பெரிய கனவு காணுங்கள்’˜ உலக மகளிர் தினத்தில் பெண்களை ஊக்குவிக்கும் லோட்டே இந்தியா

லோட்டே இந்தியா சாக்கோ பை தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களிடையே சமூக தொழில்முனைவோரும், அவதார் குழும நிறுவனரும் தலைவருமான சவுந்தர்யா ராஜேஷ் பேச்சு

சென்னை, மார்ச் 7- 2020: ஆண்டுதோறும் மார்ச் 8-ந்தேதி உலக மகளிர் தினமாக
கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி லோட்டே இந்தியா நிறுவனத்தில் பணிபுரியும்
பெண்களையும், அத்தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களின் மனைவிகளையும்
ஊக்கப்படுத்தும் விதமான நிகழ்ச்சியை இந்நிறுவனம் நடத்தியது.

இந்த நிகழ்ச்சியில் வேலை-வாழ்க்கை ஒருங்கிணைப்பை நோக்கமாகக் கொண்டு பெண்கள்
எவ்வாறு தங்கள் தொழில் மற்றும் லட்சியங்களைத் தொடர அதிகாரம் மற்றும் உத்வேகம் பெற
முடியும் என்பது குறித்து சமூக தொழில்முனைவோரும், அவதார் குழும நிறுவனரும்
தலைவருமான சவுந்தர்யா ராஜேஷ் கலந்து கொண்டு பேசினார். இதில் 70க்கும் மேற்பட்ட
பெண்கள் கலந்து கொண்டனர். ஆண்கள் சிறந்த வழிகாட்டிகளாக இருந்து பெண்களின்
வாழ்க்கையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்தும், சக பெண் ஊழியர்கள்
அவர்களின் முழு திறனை உணர்ந்து கொள்வதற்காக அவர்களுக்கு பயிற்சி மற்றும் ஆதரவு
அளிப்பது குறித்தும் விரிவாக பேசப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய சவுந்தர்யா ராஜேஷ் கூறுகையில், பாலின சமநிலையான
பணியிடங்களை நோக்கி நாம் செலலும்போது, அடிப்படையில், பெண் தொழில் வல்லுனர்களுக்கு
ஆண்களின் ஆதரவு என்பது தேவைப்படுகிறது. பெண்களை ஆண்கள் ஊக்கப்படுத்தும்போது,
அது ஒரு நிறுவனத்தில் சிறந்த மாற்றம் மற்றும் நிலையான முடிவுகளை தருகிறது என்பது
எங்கள் அவதாரின் ஆராய்ச்சி மூலம் தெரிய வந்துள்ளது. பணிபுரியும் இடத்தில் சக பெண்
ஊழியர்களிடையே ஆண் ஊழியர்கள் பாலின பாகுபாடு இல்லாமல் அவர்களுக்கு ஆதரவு
அளித்து தொழில் பயிற்சியாளராக முன் மாதிரியாக இருக்க வேண்டும். லோட்டே இந்தியாவின்

‘Pause to Celebrate’ என்னும் இந்த நிகழ்ச்சியானது வேலை, குடும்பம் மற்றும்
சமுதாயத்திற்கு இடையில் பாடுபடும் பெண்கள் சம்பந்தப்பட்டதாகும். ஏனெனில் அவர்கள் இந்த
பணிச் சுமைகளுக்கு இடையில் தங்களைக் கொண்டாட மறந்து விடுகிறார்கள் என்று
தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் லோட்டே இந்தியாவின் மார்க்கெட்டிங் துணைத் தலைவர் வெங்கடேஷ்
பார்த்தசாரதி பேசுகையில், பன்முகத்தன்மையில் சிறந்த நிபுணரான டாக்டர் சவுந்தர்யா ராஜேஷ்
நம்மிடையே இருப்பது நமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பல ஆண்டுகளாக, பெண்கள்
எந்த அங்கீகாரமும் இல்லாமல் அயராது உழைத்து வருகின்றனர். மேலும் அவர்கள் நமது
சமூகத்தின் முதுகெலும்பாகவும் இருந்து வருகின்றனர். அவர்களின் முயற்சிகளை
கொண்டாடுவதையும் ஏற்றுக்கொள்வதையும் விட வேறு சிறந்த வழி இருக்க முடியாது. இந்த
நிகழ்ச்சியின் மூலம், பெண்கள் சவால்களை எதிர்கொள்ளவும் சிறந்த தலைவர்களாக தங்களை
வெளிப்படுத்தவும் அனைத்து பெண்களையும் ஊக்கப்படுத்துவதன் மூலம் அன்றாட `சூப்பர்
ஹீரோ' பெண்ணை கொண்டாட விரும்புகிறோம் என்று தெரிவித்தார்.