வட்டார காங்கிரஸ் கட்சி ஆலோசனைக்கூட்டம்

 

கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் மேற்கு வட்டார காங்கிரஸ் கட்சியின் ஆலோசனைக்கூட்டம் வட்டார தலைவர் ரமேஷ்மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. ஐ.என்.ஆர்.எப் மாவட்ட தலைவர் பெரியசாமி, எஸ்.சி.துறை முன்னாள் மாவட்ட தலைவர் சின்னப்பன், துணைதலைவர்கள் முத்துராமலிங்கம்,தெட்சிணாமூர்த்தி, பொதுச்செயலாளர்கள் தர்மர், அந்தோணிமுத்து, முன்னாள் மாவட்ட செயலாளர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரமோகன் வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக இளைஞர் காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் கேசவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கட்சிக்கு புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது, கட்சியின் வளர்ச்சி, உள்கட்சி தேர்தல் குறித்து ஆலொசனை நடைபெற்றது. தொடர்ந்து கூட்டத்தில் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 1மாத பரோல் வழங்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது, மகாத்மாகாந்தி தேசிய ஊராக வேலைவாய்ப்புத்திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணி முடிந்த அன்றே ஊதியம் வழங்க வேண்டும்,

லிங்கம்பட்டி,கஞ்சம்பட்டி, மேலபாண்டவர்மங்கலம் சாலைகளை சீரமைக்க வேண்டும், கோவில்பட்டியில் இரவு நேரத்தில் அனைத்து பேருந்துக்களும் பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டும், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் இடையே சர்வீஸ் பஸ் இயக்க வேண்டும், உடலுழைப்பு ஊழியர்களுக்கு வழங்கி வந்த மாத ஓய்வூதியம் கடந்த 8 மாதங்களாக வழங்கப்படவில்லை, அவற்றை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,மூப்பன்பட்டி பகுதியில் தெருவிளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், திருமங்கைநகர் காலனியில் சீரான குடிநீர் வழங்க வேண்டும், கோவில்பட்டியில் இருந்து ஆவல்நத்தம் செல்லும் அரசு பேருந்து மூப்பன்பட்டிக்குவந்து செல்ல வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் திரளான காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்