லைகா புரெடெக்ஷன்ஸ் சார்பில், சுபாஸ்கரன் தயாரிப்பில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ், ஜீவிதா, அனந்திகா சுனில் குமார், செந்தில், நிரோஷா, தம்பி ராமையா, ஆதித்யா மேனன், விவேக் பிரசன்னா, தன்யா பாலகிருஷ்ணா, தங்கதுரை, ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் லால் சலாம்.
1990களில் நடக்கிறது கதை இரண்டு கிரிக்கெட் அணிகள் இருக்கின்றன. ஒரு அணி விஷ்ணு விஷாலும், மற்றொரு அணி விக்ராந்தும்.
மும்பையில் பிரபல தொழிலதிபராக இருக்கும் ரஜினிகாந்தின் மகனாக இருக்கிறார் விக்ராந்த். ரஜினிகாந்தின் நண்பன் லிவிங்ஸ்டன் மகன் விஷ்ணு விஷால்.
இந்த இரு அணிகளுக்கும் இடையே ஊருக்குள் கிரிக்கெட் போட்டி நடக்கிறது. போட்டி நடக்கும் போது மோதல் ஏற்பட்டு விஷ்ணு விஷால் விக்ராந்தை தாக்கி கை அடிபட்டு போகிறது. இதனால் ஊருக்குள் பிரச்சினையாகி மத கலவரம் ஏற்பட்டு ஊரில் உள்ள ஆண்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து வைத்திருக்கின்றனர்.
மகன் விக்ராத் என்றால் ரஜினிகாந்திற்கு உயிர் அப்படி இருக்கும் பட்சத்தில் விக்ராந்த் தாக்கப்பட்ட செய்தி ரஜினிகாந்துக்கு தெரிய வர, துடித்து நொறுங்கிப் போகிறார்.
இதற்கு காரணம் தனது நெருங்கிய நண்பனின் மகனான விஷ்ணு விஷால் தான் என்று தெரிய வருகிறது, பிறகு ரஜினிகாந்த் என்ன செய்தார்? மதக்கலவரம் சரியானதா? இல்லையா? ஊரில் தேர் திருவிழா நடந்ததா? இல்லையா? என்பதே லால் சலாம் படத்தோட மீதி கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
இசை அமைப்பாளர் : இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் ஒளிப்பதிவாளர் : விஷ்ணு ரங்கசாமி
படத்தொகுப்பாளர் : பி.பிரவீன் பாஸ்கர்
கலை இயக்குனர் : ராமு தங்கராஜ்
நடன இயக்குனர் : தினேஷ் சண்டை பயிற்சி இயக்குனர்கள் : ‘அனல்’ அரசு, ‘கிக்காஸா’ காளி, ‘ஸ்டண்ட்’ விக்கி
பாடலாசிரியர்கள் : யுகபாரதி, சினேகன், கபிலன், விவேக், ஏ.ஆர்.ரஹ்மான், மஷூக் ரஹ்மான்
கதை மற்றும் வசனகர்த்தா : விஷ்ணு ரங்கசாமி
ஆடை வடிவமைப்பாளர் : சத்யா என்.ஜே
ஒலி வடிவமைப்பாளர் : பிரதாப்
ஒலிக்கலவை : எஸ் சிவக்குமார்
படங்கள் : ஆர்.எஸ். ராஜா விளம்பர வடிவமைப்பாளர் : கபிலன் செல்லையா நிர்வாகத் தலைமை : லைகா புரொடெக்ஷன்ஸ் ஜி.கே.எம் தமிழ் குமரன்
நிர்வாக தயாரிப்பாளர் : சுப்ரமணியன் நாராயணன் மக்கள் தொடர்பு : ரியாஸ் கே அஹ்மது