குரங்கு பெடல் விமர்சனம்

சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், மாண்டேஜ் பிக்சர்ஸ் சார்பில் சவிதா சண்முகம், சுமீ பாஸ்கரன் தயாரிப்பில், கமலக்கண்ணன் இயக்கத்தில், காளி வெங்கட், மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், ராகவன், ஞானசேகர், சாய் கணேஷ், ரதீஷ், பிரசன்னா பாலசந்திரன், ஜென்சன் திவாகர், தக்ஷனா, சாவித்திரி, செல்லா, குபேரன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் குரங்கு பெடல்.

1980-இல் கத்தேரி என்னும் கிராமத்தில் நெசவு தொழில் செய்து வருகிறார் காளிவெங்கட். தன் மனைவி, மகன், திருமணமான மகள் என்று வாழ்ந்து வருகிறார். காளி வெங்கட் தொழில் சம்பந்தமாக மட்டுமல்லாமல், எங்கு சென்றாலும் நடந்தே செல்வதாலும், சைக்கிள் ஓட்ட தெரியாததாலும், நடராஜா சர்வீஸ் என்று ஊர்மக்கள் அவரை கேலி செய்து அழைக்கிறார்கள்.

காளி வெங்கட்டின் மகன் மாஸ்டர் சந்தோஷ் வேல்முருகன், தன் நண்பர்களான ராகவன், ஞானசேகர், சாய் கணேஷ், ரதீஸ் இவர்களுடன் பள்ளி கோடை விடுமுறையை ஜாலியாக கழிக்க வேண்டும் என்று நினைக்கிறான்.

ஒருநாள் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து சைக்கிள் ஓட்டி பழக ஆசைப்பட்டு, பிரசன்னா பாலசந்திரன் வைத்திருக்கும் வாடகை சைக்கிள் கடையில், சைக்கிளை வாடகைக்கு எடுத்து ஓட்டி பழகுகிறார்கள்.

அப்போது நண்பர்களில் ஒருவன் சொந்தமாக சைக்கிள் வாங்க, அவனுடன் மற்ற மூன்று நண்பர்களும் போய் விட, மாரியப்பன் மட்டும் சைக்கிளை வாடகைக்கு எடுத்து தன்னந்தனியாக ஒட்ட முயற்சி செய்கிறான்.

கடைசியில், சைக்கிள் அதிக உயரமாக இருப்பதால், இரண்டு பெடல்களின் நடுவே காலை வைத்து ஒட்டும் குரங்கு பெடல் போட்டு நன்றாக ஒட்ட கற்றுக்கொள்கிறான்.

இப்படி ஓட்டி கொண்டு இருக்கும் போது, தன் நண்பர்களுடன் மலை மீது ஏறும் போட்டிக்கு ஒத்துக் கொள்கிறான்.
வாடகை சைக்கிளை திருப்பி தருகின்ற நேரம் முடிந்து விட அதற்கான காசை
புரட்ட மிகவும் சிரமபடுகிறான்.

வீட்டை விட்டு போன மகன் திரும்பி வராததாலும், வாடகைக்கு எடுத்த பிரசன்னா பாலசந்திரன் சைக்கிளை திரும்பி தராததாலும் இருவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.

எல்லாரும் சேர்ந்து மாரியப்பனை தேடுகிறார்கள். மாரியப்பனை ஊர் மக்கள் கண்டுபிடித்தார்களா? மாரியம்மன் கிடைத்தானா? இல்லையா? சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டானா? இல்லையா? வாடகை சைக்கிளின் பாக்கியை தந்தானா? என்பதே குரங்கு பெடல் படத்தின் மீதீக்கதை.

தொழில் நுட்ப கலைஞர்கள்

இணை தயாரிப்பு : சஞ்சய் ஜெயகுமார்
கலையரசு
இசை : ஜிப்ரான் வைபோதா
ஒலி வடிவமைப்பு : ஆண்டனி பி. ஜெயரூபன்
ஒளிப்பதிவு : சுமீ பாஸ்கரன்
எடிட்டர் : சிவநந்தீஸ்வரன்
திரைக்கதை : கமலக்கண்ணன், பிரபாகர் சண்முகம்
வசனம் : பிரபாகர் சண்முகம்
பாடல்கள் : இயக்குனர் பிரம்மா, போ.மணிவண்ணன், என்.டி.ராஜ்குமார்
கலை : சதீஸ் சிவன், சுரேஷ் திலகவதி
குழந்தைகள் நடிப்பு பயிற்சி : நந்தகுமார் கலரிஸ்ட் : பாலாஜி
படக்கலவை : சிவகுமார்
டிசைன்ஸ் : லோகேஷ் கந்தசாமி
மக்கள் தொடர்பு : சுரேஷ்சந்திரா டிஒன்