‘கும்பாரி’ விமர்சனம்

ராயல் எண்டர்பிரைசஸ் சார்பில், டி. குமாரதாஸ் தயாரிப்பில், கெவின் ஜோசப் இயக்கத்தில், விஜய் விஷ்வா, மஹானா சஞ்சீவி, பருத்திவீரன் சரவணன், நலீப் ஜியா, ஜான் விஜய் ,சாம்ஸ் ,மதுமிதா, மீனாள், ராயன் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள கும்பாரி படத்தை 90 ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது.

நண்பர்களாக இருக்கும் கேபிள் டிவி ஆபரேட்டரான விஜய் விஷ்வாவும், மீன் பிடி தொழில் செய்பவரான நலீப் ஜியாவும், பெற்றோர்கள் இல்லாதவர்கள். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்துக் கொள்ளாமல் நட்புடன் இருக்கிறார்கள்.

நாலைந்து ரவுடிகள், நாயகி மஹானாவை துரத்திக் கொண்டு ஓடுகிறார்கள். அவர் மூச்சு முட்ட ஓடுகிறார். வழியில் பார்ப்பவர்களிடம் எல்லாம் உதவி கேட்கிறார். யாரும் உதவி செய்யாமல், பயந்து விலகிக் கொள்கிறார்கள். இந்த சமயத்தில் இதனை பார்த்த விஜய் விஷ்வா அந்த ரெளடிகளை அடித்து துவம்சம் செய்கிறார். அப்போது “என்ன நீ நிஜமாகவே அடிக்கிறாய்?” என்று கேட்கிறார்கள்.

பிறகுதான் தெரிகிறது, அது மஹானா நடத்தும் யூடியூப் சேனலுக்காக எடுக்கப்படும் ஒரு பிராங்க் வீடியோ என்று. இதை அறிந்து நாயகி மஹானாவை விஜய் விஷ்வா ஓங்கி அறைந்து விடுகிறார் . உன் சேனலை மக்கள் பார்க்க வேண்டும் என்று இப்படி ஏமாற்றலாமா ?என்று திட்டுகிறார். அந்த பிராங்க் வீடியோ பல லட்சம் பேரால் பார்க்கப்படுகிறது.

விஜய் விஷ்வாவோட துணிவும், அவரது குணமும் பிடித்துப் போக மஹானா, விஜய் விஸ்வாவை காதலிக்க ஆரம்பிக்கிறார். ஆனால் திருமணம் செய்து கொள்வதில் ஒரு பிரச்சனை உண்டு. நாயகி மஹானாவுக்குத் திருமண வயது 21 ஆகவேண்டுமென்றால் 7 நாட்கள் மீதம் உள்ளன. அந்த ஏழு நாட்களை எப்படியாவது சமாளித்துத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று திட்டமிடுகிறார்கள். அதனால் வீட்டை விட்டு வெளியேறிப் பல இடங்களுக்கு இடம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.இருவரையும் சேர்த்து வைக்க நண்பர் ஜியா உதவுகிறார்.

நாயகியின் அண்ணன் ஜான் விஜய் அடியாட்களை வைத்துத் துரத்துகிறார். காதலுக்கு உதவிய நண்பனையும் பழி வாங்கத் துடிக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் ஜியா காணாமல் போகிறார். நண்பன் காணாமல் போனதால் ஜான் விஜய் கோஷ்டியால் கொலை செய்யப்பட்டதாக விஜய் விஷ்வா நம்புகிறார். அதற்காக நீதிமன்றம் சொல்கிறார். ஆனால் அவர் கொலை செய்யப்படவில்லை நடந்தது வேறு என்று காட்சிகள் வருகின்றன.
ஜியாவுக்கு என்ன ஆயிற்று? விஜய் விஷ்வா காதல் என்னானது? காதலர்களை வெறியோடு துரத்தும் ஜான் விஜய் கும்பல் என்ன செய்கிறது? முடிவு என்ன?
என்பதே கும்பாரி படத்தோட மீதிக்கதை.

படம் ப்ளாஷ் பேக் எனப்படும் முன்கதை சொல்வது போல் ஆரம்பித்து கடந்த காலத்தில் பயணித்து நகர்கிறது.

இதில் ஒரு காதல் கதையும் அண்ணன் தங்கை பாசக்கதையும் பின்னி பிணைந்து திரைக்கதை ஆக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள்

இசை : ஜெய்பிரகாஷ், ஜெய்சன், பிரித்வி
ஒளிப்பதிவு : பிரசாத் ஆறுமுகம்
எடிட்டர் : T.S.ஜெய்
கலை : சந்தோஷ் பாப்பனங்கோடு
சண்டை : மிராக்கிள் மைக்கேல்
நடனம் : ராஜுமுருகன்
பாடல்கள் : வினோதன், அருண் பாரதி, சீர்காழி சிற்பி.
மக்கள் தொடர்பு : சக்தி சரவணன்