பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி குமரி அனந்தன் நடைபயணம்

தமிழகத்தில் பூரண மது விலக்கு அமல்படுத்த வலியுறுத்தி சென்னையில் இருந்து கிருஷ்ணகிரி மாவட்டம் தொரப்பள்ளி வரை  இம்மாதம் 19ஆம் தேதி தன்னுடைய 85வது பிறந்த நாளன்று  நடை பயணம் செல்ல இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் குமரி அனந்தன் சென்னையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.