கோவில்பட்டி கீளின் – ஆப்ரேசன் பகுதி -2- அரசு அதிகாரிகளின் அடுத்த நடவடிக்கை

கோவில்பட்டி வண்ணாவூரணி பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை நேற்று முன்தினம் அகற்றும் பணிகள் தொடங்கி நடைபெற்றது. அந்த நடவடிக்கையில் 2வது கட்டமாக இன்று மார்க்கெட் சாலை முகப்பு பகுதி மற்றும் மெயின் சாலைபகுதியில் வண்ணாவூரணி கால்வாய் தொடர்சிபகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணியில் நகராட்சி மற்றும் வருவாய்துறையினர் ஈடுபட்டனர். தாசில்தார் ஜான்சன்தேவசகாயம், நகராட்சி ஆணையர் அச்சையா ஆகியோரின் மேற்பார்வையில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஜே.சி.பி. இயந்திரத்தின் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

டி.எஸ்.பி.முருகவேல் தலைமையில் பிரச்சினை ஏற்படமால் இருக்கும் வகையில் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது. அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கை சிலர் பாதிப்பு என்று புலம்பினாலும், நகர மக்களுக்கு 100 சதவீத நன்மைகளை தரும் என்பதில் எவ்வித ஐயமில்லை, இந்த முயற்சி தொடருவது மட்டுமில்லமால், கோவில்பட்டி நகராட்சி பகுதியில் காணமால் போன கழிப்பிடங்களையும், குடிநீருக்காக போடப்பட்ட அடிபாம்புகளை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.