இந்தியாவில் தனது உலகத் தரத்திலான மின் தூக்கிகள் உற்பத்தி தொழிற்சாலையை தொடங்கியுள்ள கோனே நிறுவனம்

  • கோனே நிறுவனத்தின் இந்த புதிய அதிநவீன தொழில்நுட்பங்களுடனான தொழிற்சாலை இந்தியா, ஆசியா மற்றும் தென் கிழக்கு ஆசியப் பகுதியிலேயே மிகப் பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
  • 450 கோடி ரூபாய் முதலீட்டிலான இந்த தொழிற்சாலை உலக அளவிலான ஏற்றுமதியை அதிகரிக்கும்.
  • ‘மேக் இன் இந்தியா’ திட்டத்திற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், 80% உபகரணங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட இருக்கிறது.
  • சுற்றுச்சூழலுக்கு ஏற்றவகையில், இந்த தொழிற்சாலை பசுமைத் தரக் குறியீட்டு நடைமுறைகளுக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளது 

சென்னை, நவம்பர் 5, 2019:- மின் தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் தயாரிப்பில் உலகில் முன்னணியில் உள்ள, கோனே கார்பரேஷனின் [KONE Corporation] முழு உரிமம் உள்ள துணை நிறுவனமான, ’கோனே எலிவேட்டர் இந்தியா நிறுவனம்[KONE Elevator India Pvt. Ltd], தனது உலகத் தரத்திலான மின்தூக்கிகளுக்கான தொழிற்சாலையை சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கத்தில் உள்ள சிப்காட் தொழில் பூங்காவில் [SIPCOT Industrial Park, Pillaipakkam, Sriperumbudur Chennai] கட்டமைத்து, அதைத் திறந்து செயல்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்த அதிநவீன உற்பத்தித் தொழிற்சாலையை மேதகு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் [Thiru Banwarilal Purohit, Honourable Governor of Tamil Nadu] தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஃபின்லாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெச்.. பெக்கா ஹாவிஸ்டா [H.E. Pekka Haavisto, Honourable Minister for Foreign Affairs of Finland], தமிழ்நாடு அரசின் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத் [Thiru M. C. Sampath, Honourable Minister for Industrial Department, Govt. of Tamil Nadu], கோனே நிறுவனத்தின் தலைவர் ஆண்ட்டி ஹெர்லின், கோனே நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஹென்ரிக் எர்னூர்த் [Antti Herlin, Chairman, Henrik Ehrnrooth, President & CEO], கோனே கார்பொரேஷன் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் மற்றும் ஆஸ்திரேலியா செயல் துணைத் தலைவர் ஆக்செல் பெர்க்லிங் [Axel Berkling, EVP APA], கோனே இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அமித் கோஸ்ஸெயின் [Amit Gossain, Managing Director, KONE India] உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முன்னிலை வகித்தனர். தேவைக்கு ஏற்ற அளவிலான உற்பத்தித் திறனுடன், 450 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்தப் புதிய தொழிற்சாலையில், 600-க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்புப் பெறுவார்கள்.

கோனே இந்தியாநிறுவனம், தனது புதிய தொழிற்சாலையின் மூலமாக நாட்டின் விரைவாக மாறிவரும் நகர்மயமாக்கலுடன் இணைந்து பயணிக்க முழுவீச்சில் தயார் ஆகியுள்ளது. 50 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மின் தூக்கி உற்பத்தித் தொழிற்சாலை இந்தப் பகுதியிலேயே மிகப் பெரியது ஆகும். வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட செயல்பாட்டு யுக்திகளையே தனது பிரதான நோக்கமாக கொண்டிருக்கும் கோனே இந்தியா நிறுவனம், அதி நவீன மற்றும் மிகச் சிறந்த தரத்திலான தயாரிப்புகளை வாடிக்கையாளர்களுக்கு குறுகிய காலத்தில் வழங்குவதற்காகவே அதி நவீன தொழில்நுட்பக் கருவிகளைக் கொண்டு இந்தத் தொழிற்சாலையை வடிவமைத்துள்ளது.   இந்தப் புதிய தொழிற்சாலையைனது இந்தியச் சந்தையில் தனது முழுக்கவனத்தை செலுத்தும் அதேநேரத்தில் அண்டை நாடுகளான நேபாளம், பூடான், வங்கதேசம், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கும் கோனே இங்கு உற்பத்தியாகும் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும்

நிகழ்ச்சியில் பங்கேற்று தொழிற்சாலையைத் தொடங்கி வைத்துப் பேசிய மேதகு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,கோனே இந்தியா நிறுவனத்தின் புதிய உலகத் தரத்திலான மின்தூக்கி உற்பத்தித் தொழிற்சாலையின் தொடக்கவிழாவுக்காக நான் இங்கிருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியளிக்கிறதுஇந்த பிராந்தியத்திலேயே மிகப்பெரிய மின் தூக்கி உற்பத்தித் தொழிற்சாலையை கட்டமைப்பதற்காக, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பள்ளிப்பாக்கம் சிப்காட் தொழில் பூங்காவை கோனே நிறுவனம் தேர்வு செய்திருப்பது எனக்கு கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கிறதுஅதி நவீன தொழில் நுட்ப தீர்வுகளையும், வேலைவாய்ப்புகளையும் நம் நாட்டிற்கு வழங்கும் கோனே கார்பொரேஷன் நிறுவனத்தின் இந்த முதலீட்டை நாங்கள் மனதார வரவேற்கிறோம்.” என்றார்.

ஃபின்லாந்து நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஹெச். . பெக்கா ஹாவிஸ்டோ இந்த நிகழ்ச்சியில் தமது கருத்துகளைத் தெரிவித்துப் பேசுகையில், இந்த மதிப்புமிகு நிகழ்ச்சியில் நானும் ஒரு அங்கமாக பங்கேற்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவும் ஃபின்லாந்தும் அருமையான நட்புறவுடன், வலுவான வர்த்தக உறவுகளைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் இரு நாடுகளுக்கும் இடையிலான ஏற்றுமதி மற்றும் இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. இந்தியா உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக உள்ளது. இந்த வலுவான பொருளாதார வளர்ச்சியில் ஃபின்லாந்து நிறுவனங்கள் சிறந்த பங்களிப்பை உற்சாகத்துடன் வழங்கி வருகின்றன. ஃபின்லாந்தில் இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்களது வலுவான செயல்பாடுகளை விரிவுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.” என்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு அரசின் தொழில் துறை அமைச்சர் எம்.சி. சம்பத்,நாட்டில் தொழில் வளம் மிகுந்த மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக, முன்னில வகிக்கிறது. இந்தியாவில் தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறை பணியாளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் ஒப்பிடும்போது, மற்ற எல்லா மாநிலங்களையும் விட அதிகளவிலான தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சாலை பணியாளர்களுடன் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. மிகச் சிறந்த அமைவிடம், வர்த்தகம் புரிவதற்கு ஏற்ற சூழல், அதி நவீன உள்கட்டமைப்பு வசதிகள், நேர்மறையான சிறந்த அரசு நிர்வாகம், நல்ல சுற்றுச்சூழல் ஆகிய பல அம்சங்கள் தமிழகத்தில் ஒருங்கே அமைந்துள்ளதால் வெளிநாட்டு முதலீடுகளை மேற்கொள்ள அதிகம் விரும்பப்படும் இடங்களில் ஒன்றாக இது திகழ்கிறது. கோனே நிறுவனம் ,இந்த அதிநவீன மேம்பட்ட தொழில்நுட்பங்களுடனான தொழிற்சாலையை தமிழகத்தில் அமைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் மூலம் தமிழகப் பொருளாதாரம் மேலும் வலுவடையும் என்று நான் நம்புகிறேன்.” என்றார்.

இந்தத் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளதன் நோக்கம் மற்றும் பின்னணி குறித்து கருத்துத் தெரிவித்த கோனே கார்பொரேஷன் நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி ஹென்ரிக் எர்னூர்த்,இந்தியாவில் இந்த அதிநவீன தொழிற்சாலையை தொடங்குவதில் நாங்கள் பெரிய மகிழ்ச்சி அடைகிறோம். இந்த அதிநவீன தொழில்நுட்ப அம்சங்களுடன் விரிவாக்கப்பட்ட தொழிற்சாலை எங்களது வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும். அத்துடன் இந்தியாவிலும் அண்டை நாடுகளிலும் மின்தூக்கி தேவையின் வளர்ச்சிக்கு ஏற்ப தேவையை எதிர்கொள்ள இது உதவும். வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட எங்களது வெற்றி உத்தி தொடர்ந்து மேற்கொள்ளப்படும். இதன் மூலம் எங்களது வாடிக்கையாளர்களின் தொழில்களும் நிலைத் தன்மை உடையதாக மேலும் வளர்ச்சி அடையும். இது போன்ற பல்வேறு அம்சங்களைக் கருத்தில் கொண்டு எங்களது இந்தப் புதிய தொழிற்சாலையில் சுற்றுச்சூழலுக்கேற்ற அம்சங்களை தீவிரமாக அமல்படுத்தியுள்ளதுடன் எரிசக்தி சிக்கனத்துக்கான அம்சங்களையும் செயல்படுத்துகிறோம்.” என்றார்.

கோனே கார்பொரேஷன் நிறுவனத்தின் ஆசிய பசிபிக் மண்டல செயல் துணைத் தலைவர் ஆக்செல் பெர்க்லிங் பேசுகையில், கோனே நிறுவனத்தின் திட்டங்களில் ஆசிய பசிபிக் மண்டலத்துக்கான மட்டுமின்றி உலக அளவிலான திட்டங்களிலும் இந்தியா முக்கியப் பங்காற்றுகிறது. அதன் அடிப்படையில் இந்த விரிவாக்கம் மிக அதிக முக்கியத்துவம் பெறுகிறது இந்தியாவில் புதிய தொழில்நுட்பங்களை ஏற்று கொண்டு அவற்றை செயல்படுத்தும் விகிதம் மிக அதிகம் என்பது நம் எல்லோருக்கும் தெரியும். இந்த புதிய தொழிற்சாலையானது அதிகரித்து வரும் சந்தைத் தேவைகளுக்கு ஏற்ப உலகத் தரத்திலான மிகச்சிறந்த தயாரிப்புகளை வழங்குவதில் முக்கியப் பங்காற்றும்.” என்றார்.

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட மிக புதுமையான தொழில் நுட்ப நிறுவனங்கள் பட்டியலில் [most innovative companies list of Forbes]  கோனே ஏழு முறை இடம் பெற்றுள்ளது. புதுமைத் தொழில்நுட்பங்கள் கோனே நிறுவனத்தின் மிக முதன்மையான செயல் உத்தியாகும். கோனே நிறுவனம் தொடர்ந்து தொழில் நுட்பங்களை மேம்படுத்தி வருவதன் மூலம், நகர்ப்புற வாழ்வின் வாய்ப்புகளை மேம்படுத்த உறுதி பூண்டுள்ளது. மேலும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றவகையில் எரிசக்தி மற்றும் வளங்களை சிக்கனமாக பயன்படுத்தி, மேம்பட்ட தயாரிப்புகளை வெளிப்படைத் தன்மையுடன், வழங்குவதையே, கோனே தனது புதுமைப் படைப்பாகக் கருதுகிறது. இதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை ஏற்படுத்தித் தர கோனே தீவிர முயற்சி மேற்கொள்கிறது. கோனே நிறுவனத்தின் மின் தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகளைப் பயன்படுத்துபவர்கள் அதன் பயன்பாட்டின் தொடக்கம் முதல் நிறைவுத் தருணம் வரை மிகச் சிறந்த அனுபவத்தை உணர்கின்றனர்.

சுற்றுச்சூழலுக்கு மிகவும் உகந்த வழிமுறைகளில், மிகச் சிறந்த தொழில் நுட்பத்துடன் நகர்மயமாதலுக்கு ஊக்கமளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து கருத்துத் தெரிவித்துப் பேசிய கோனே இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் அமித் கோஸ்ஸெயின்,இந்த புதிய மின் தூக்கி உற்பத்தி நிறுவனம்கோனே இந்தியா நிறுவனம் இதர சந்தைகளுக்கு மேற்கொள்ளும் ஏற்றுமதியை அதிகரிக்கும். இதன் மூலம் வேலைவாய்ப்புகளையும் உருவாக்கும். இந்த புதிய உற்பத்தி தொழிற்சாலையானது, மாறி வரும் வர்த்தகச் சூழலில், வளர்ச்சியை அதிகரிக்கும் விதமாகவும் மின்னணுமய வாய்ப்புகளை ஊக்குவிக்கும் நோக்கிலும் அமைக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் மற்றும் பயன்படுத்துவோரின் அனுபவங்களை சிறப்பானதாக்கும் வகையில் தனித்துவமான முறைகள் இங்கு கையாளப்படும். அத்துடன் கோனேவின் செயல்பாடுகளில் தரமும் உற்பத்தித் திறனும் சிறந்து விளங்கும்.” என்றார்.

அவர் மேலும் கூறுகையில்,மிக வேகமாக வளர்ந்து வரும் தேவைகளை சமாளிக்கும் வகையில், இந்தத் தொழிற்சாலையை நாங்கள் அதிகரிக்கப்பட்ட உற்பத்தித் திறனுடன் கூடியதாக அமைத்துள்ளோம். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவுக்கும் நாங்கள் குறிப்பிடத்தக்க முதலீட்டைச் செய்துள்ளோம். செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கு மிகச் சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த மனித ஆற்றலை நாங்கள் உருவாக்கியுள்ளோம். எங்களிடம் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட   நேரடிப் பணியாளர்கள் வேலை வாய்ப்புப் பெற்றுள்ளனர்மேலும் துணை ஒப்பந்ததாரர்கள், விநியோகஸ்தர்கள், பங்குதாரர்கள் உள்ளிட்ட பலர் மூலமாக பலர் மறைமுக வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர். இதன் மூலம் ஒன்றிணைந்து புதுமைகளை வழங்க முடிகிறது.” என்றார்.

சுற்றுச்சூழலுக்கு உகந்த சூழலை உருவாக்கும் வகையில் இந்த புதிய தொழிற்சாலை இந்தியாவின் பசுமை கட்டட கவுன்சிலின் (ஐஜிபிசி) [Indian Green Building Council (IGBC)]  விதிமுறைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய உற்பத்தித் தொழிற்சாலையானது மேம்பட்ட செயல்திறனை வழங்கும் வகையில் பல நவீன உத்திகளுடன் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்டுள்ளது. மின் சிக்கனம், நீர் சிக்கனம், கார்பன்டை ஆக்சைடு உமிழ்வைக் குறைக்கும் வழிமுறைகள், உள் சூழல் தர மேம்பாடு மற்றும் வளங்களின் அளவான பயன்பாடு ஆகியவை கவனத்தில் கொள்ளப்பட்டுஅவற்றினால் உண்டாகும் தாக்கங்களின் மீதும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

கோனே நிறுவனம், 100 ஆண்டுகளாக தன்னை மக்களுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டு செயல்பட்டு வருகிறது. நூறு ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியமிக்க வரலாற்றைக் கொண்டிருக்கும் கோனே நிறுவனம், தனது மிகச்சிறந்த வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறப்பான வாடிக்கையாளர் அனுபவத்தை அளிக்கும் வகையில், தன்னுடைய புதுமையான தயாரிப்புகள், மேம்பட்ட பாதுகாப்பு மற்றும் சூழலியலுக்கு ஏற்ற படைப்புகளை வழங்குவதில் இந்த துறையிலேயே முன்னணி நிறுவனமாகத் திகழ்கிறது

கோனே பற்றி….:

கோனே நிறுவனத்தின் நோக்கம் நகர்ப்புற வாழ்வின் தரத்தை உயர்த்துவது ஆகும். மின் தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகளின் உற்பத்தியில் உலக அளவில் முன்னணி வகிக்கும் கோனே மின் தூக்கிகள், நகரும் படிக்கட்டுகள், தானியங்கி கதவுகள் [elevators, escalators & automatic building doors] உள்ளிட்டவற்றைத் தயாரித்து வழங்கி வருகிறது. தனது தயாரிப்புகளுடன் அவற்றுக்கான மிகச்சிறப்பான பராமரிப்பு தேவைகளையும் தனது நிபுணத்துவமிக்க சேவைகள் மூலம் பூர்த்தி செய்து வருகிறது. இது கட்டிடங்களுக்கு அவற்றின் முழு ஆயுள் காலம்வரை மதிப்பளிப்பதுடன் அவற்றின் நவீனத்துவத்துக்கும் பங்காற்றுகிறது. தனது People Flow® மூலம் அதிக மக்களைச் சென்றடையும் வகையில் மக்களுக்கு பாதுகாப்பான, வசதியான மற்றும் நம்பகமான தயாரிப்புகளை மிக உயரமான மற்றும் நவீன கட்டடங்களில் பயன்படுத்தும் வகையில் நாங்கள் வழங்குகிறோம். 2018-ஆம் ஆண்டு கோனே நிறுவனம் 9.1 பில்லியன் யூரோ ஆண்டு வர்த்தகம் மேற்கொண்டது. அந்த ஆண்டின் இறுதியில் உலகம் முழுவதும் 57 ஆயிரம் ஊழியர்கள் பணியில் இருந்தனர். கோனே நிறுவனம் ஃபின்லாந்தின் நாஸ்டாக் ஹெல்ஸின்கி நிறுவனத்தில் [Nasdaq Helsinki Ltd. in Finland] பி பிரிவு பங்குகளில் [class B shares]. பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு www.kone.com என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

கோனே இந்தியா பற்றி….:

கோனே இந்தியா 1984-ம் ஆண்டில் இருந்து இந்தியாவில் செயல்படுகிறது. இன்று இந்தியாவின் மிக முன்னணி மின் தூக்கி நிறுவனம் ஆக  பிரதான இடத்தில் இருக்கிறது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு 50-க்கும் மேற்பட்ட கிளைகள் மூலமாக நாட்டின் அனைத்துப் பகுதி வாடிக்கையாளர்களுக்கும் தனது சேவைகளை அளித்து வருகிறது. மேலும் மிக துரிதமாக வளர்ச்சிக்கண்டு வரும் இந்திய நகரங்களில் தனது People Flow™ தீர்வுகளின் மூலம் நிலையான வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது. இதனால் அதிக மக்கள் பயன்படுத்தும் வகையில் பல்வேறு நகரங்களில் இதன் தயாரிப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த நிறுவனத்தில் நாடு முழுவதிலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.

சென்னையில் உள்ள கோனேயின் உற்பத்தி நிறுவனம் இந்திய சந்தைகள் மற்றும் வங்கதேசம், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளுக்கும் மின் தூக்கிகளை உற்பத்தி செய்து விநியோகித்து வருகிறது. சென்னையில் மூன்று பயிற்சி மையங்களும் உள்ளன. இதில் மின் தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகளை நிறுவும் பொறியாளர்கள் [installation engineers], கள பொறியியல் பணியாளர்கள் [field mechanics] உள்ளிட்டோருக்குகோனே பின்பற்றி வரும் மேம்பட்ட உயர் தரம், பெரும் நம்பகத் தன்மை, சமரசம் இல்லாத ஈடுஇணையற்ற பாதுகாப்பு மற்றும் இந்திய வாடிக்கையாளர்களின் எதிர்பார்புகள் ஆகியவற்றை எதிர்கொள்ளும் வகையில்   இவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதனால் மின் தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகளை நிறுவும் போது இந்திய வாடிக்கையாளர்களின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் கோனே பூர்த்தி செய்கிறது. கோனேவின் உலக தொழில் நுட்பம் மற்றும் பொறியியல் மையம் சென்னையில் உள்ளது. இந்த மையம் இந்த நிறுவனத்தின் உலகளாவிய எட்டு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் ஒன்றாகும். இதில் கோனேவின் எதிர்கால தயாரிப்புகளுக்கு ஏற்ற வகையில் நவீன தொழில் நுட்பங்கள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு www.kone.in என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.

மேலும் விவரங்களுக்கு

KONE India 

Ritika Chandhok  | ritika.chandhok@kone.com  | +91 9999100092