4000 ரன்களை ஒரு வருடத்தில் நிறைவு செய்து கோலி சாதனை

இலங்கை-இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடந்தது. இதில், டாஸ் ஜெயித்த இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இலங்கை, 216 ரன்களில் சுருண்டது. பின் விளையாடிய இந்தியா, வெற்றி இலக்கை எளிதாக சேஸ் செய்து போட்டியை வென்றது. போட்டியில், தவான் (132) சதம் மற்றும் கோலி 82 ரன்கள் குவித்து களத்தில் இருந்தனர். இதன் மூலம், கேப்டனாக ரன் சேஸ்ங்கில், 4001 ஒருநாள் ரன்களை நிறைவு செய்த 2வது இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.

சர்வதேச அளவில் 3வது வீரராக திகழ்கிறார். இந்த லிஸ்டில் சச்சின் டெண்டுல்கர் 5490 ரன்களுடன் முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 4186 ரன்களுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.  ஒருநாள் போட்டிகளில் சேஸிங்கில் அதிகமாக 50 ரன்களுக்கு மேல் அடித்த வீரர்களில் கோலி, 45 முறை விளாசி 3வது இடத்தில் இருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் 69 முறை அடித்து முதல் இடத்தை பிடித்திருக்கிறார். காலிஸ் (50 முறை) 2-வது, கங்குலி (44 முறை) 4வது இடத்திலும் இருக்கின்றன.

கடந்த ஒரு வருடத்தில் கோலி சேஸிங்கில் எடுத்த ரன்கள் 

85- நியூசிலாந்து 
154 – நியூசிலாந்து
122- இங்கிலாந்து 
76- தென் ஆப்பிரிக்கா 
96- வங்கதேசம் 
111- வெஸ்ட் இண்டீஸ் 
82- இலங்கை