ஃபோர்ப்ஸ் பத்திரிகை 2017ஆம் ஆண்டிற்கான விளையாட்டு வீரர்களின் பிராண்ட் மதிப்பு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் மெக்சிகோவை சேர்ந்த கால்பந்து வீரர் மெஸிஸ்ஸியை பின்னுக்கு தள்ளி இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 7-வது இடத்தை பிடித்துள்ளார். விளையாட்டு துறையை சேர்ந்த சிறந்த வீரர்களின் பிராண்ட் மதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தங்கள் துறை மூலம் பெறும் சம்பளம் மற்றும் போனஸ், முதலீடுகள் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகிவற்றை தவிர்த்து வீரர்களுக்கு கிடைக்கும் மற்ற வருமானத்தை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியலானது தயார் செய்யப்பட்டுள்ளது.
இதில் 94.07 கோடி ரூபாய் மதிப்புடன் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி 7-வது இடத்தில் உள்ளார். இந்த பட்டியலில் டாப் 10-ல் இடம் பிடித்த ஒரே கிரிக்கெட் வீரரும் இவர் தான். உலக அளவில் மிகவும் பிரபலமான கால்பந்து வீரர் மெஸ்ஸி 87.58 கோடி ரூபாய் மதிப்புடன் 9-வது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் உள்ளார். இவரின் மதிப்பு சுமார் 241 கோடி ரூபாயாகும். தோனிக்கு பிறகு இந்த கேப்டனாக பொறுப்பேற்றுக் கொண்ட கோலி, இந்திய அணியை மிக சிறப்பான பாதையில் வழி நடத்தி சென்றுக் கொண்டிருக்கிறார். கிரிக்கெட் மட்டுமல்லாது விளம்பர படங்கள் பலவற்றிலும் கோலி நடித்துள்ளார்.