ஷாம் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் காவியன்

Madhavan in IRUDHI SUTRU

2M cinemas K.V.சபரீஷ் தயாரிப்பில், சாரதி இயக்கத்தில் நடிகர் ஷாம் நடிப்பில் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் ஒரு பிரமாண்ட திரைப்படம் காவியன், திரில்லர் ஜானரில் உருவாகும் இப்படத்துக்கு தமிழில் காவியன் என்றும் தெலுங்கில் வாடு ஒஸ்தாடு என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இப்படத்துக்காக சண்டை பயிற்சியாளர் STUNT சிவா தலைமையில் ஒரு பயங்கர கார் சேஸிங் சண்டைக்காட்சி, லாஸ் வேகாஸில் மக்கள் அதிகம் கூடும் வீதிகளில் பரபரப்பாக படமாகியுள்ளது. இந்த சண்டைக்காட்சி அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தும். இது மட்டுமல்ல இப்படத்தில் கோலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகர்கள் மற்றும் தொழிலநுட்ப கலைஞர்கள் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர்.

இதனால் இப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஷாம் ஜோடியாக மனம் கொத்திப் பறவை நாயகி ஆத்மியா நடிக்கும் இப்படத்தில், ஸ்ரீதேவி குமார், ஸ்ரீ நாத் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். கோலிவுட் நடிகர் ஜெஸ்டின் விகாஸ் இந்த படத்தின் வில்லனாக நடிக்கிறார். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து விட்டது.

மேலும் இந்த படத்திற்கான இசை வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது. 12 B படம் போல் இந்த காவியனும் ஷாமிற்கு ஒரு முக்கிய திருப்பு முனையாக அமையும் என்றார் தயாரிப்பாளர் கே.வி.சபரீஷ். பல்வேறு வகையில் இப்படத்திற்கான புரமோஷன்கள் தமிழகத்திலும் ஆந்திராவிலும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நடிகர் ராகவா லாரண்ஸ், முதல் கட்டமாக வரும் 15 ஆம் தேதி இப்படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டீசரை வெளிடுகிறார்.