ஷரிஃப் முகமது தயாரிப்பில், பால் ஜார்ஜ் இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ் பெப்பே, சுனில், கபீர் துஹான் சிங், துஷாரா விஜயன், ராஜ் திரன்தாசு, பார்த் திவாரி,ஹரிசங்கர் நாராயணன், சந்தீப் ரவிராஜ் மற்றும் அல்போன்ஸ் புத்ரன், லோகேஷ் கனகராஜ் (கேமியோ) ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் காட்டாளன்.
கடத்தல் காரணமாக இருக்கும் சுனில் கேரளாவில் உள்ள ஒரு வனப்பகுதியையும் அங்கு காலம் காலமாக வாழும் பழங்குடியின மக்களையும் தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். அங்குள்ள யானைகளை கொன்று அதனுடைய தந்தங்களை கடத்தி வியாபாரம் செய்து வருகிறார்.
கபீர் துஹான் சிங் சூழலில் இடத்தைப் பிடிக்க நினைக்கிறார். எதற்காக சுழல் கடத்தும் தந்தங்களை காவல்துறையின் உதவியோடு கைப்பற்றி தொழிலின் கடத்தல் தொழிலுக்கு முடிவு கட்ட நினைக்கிறார்.
சுனிலோ பறிபோன தன்னுடைய தந்தங்களை மீட்டுக் கொண்டு வருவதற்காக நாயகனான ஆண்டனி வர்கீஸை வரவழைக்கிறார்.
ஆண்டனி வர்கீஸும் தன்னுடைய தந்திரமான வேலையை பயன்படுத்தி காவல்துறையிடம் இருந்து ஏமாற்றி தந்தங்களை மீட்டு வருகிறார்.
ஒரு கட்டத்தில் சுனிலுக்கு துணையாக இருந்த ஆண்டனி வர்கீஸ் அங்கு இருக்கும் பழங்குடியின மக்களுக்கு உதவியாக மாறுகிறார். இதனால் சுனில் ஆண்டனி வர்கீஸை தீர்த்து கட்ட முடிவு செய்கிறார்.
அதற்காக தன்னுடைய எதிரியாக இருக்கும் கபீர் துஹான் சிங்குடன் இணைகிறார்.
இருவரும் சேர்ந்து ஆண்டனி வர்கீஸை என்ன செய்தார்கள்? ஆண்டனி வர்கீஸ் பழங்குடியின மக்களுக்கு உதவி செய்தாரா? இல்லையா? என்பதே காட்டாளன் படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்கம் : பால் ஜார்ஜ்
தயாரிப்பு : ஷரீப் முகமது
இசை : ரவி பஸ்ரூர்
வசனம் : உன்னி ஆர்
ஒளிப்பதிவு : ரெனடிவ்
எடிட்டிங் : ஷமீர் முஹம்மது
சண்டை : ஆக்ஷன் சந்தோஷ், கெச்சா காம்பக்டீ
நடனம் : ஷெரீப்
பிற மொழி டப்பிங் இயக்குனர்-ஆர்.பி.பாலா (ஆர்.பி ஸ்டுடியோஸ்)
மக்கள் தொடர்பு (தமிழ்) : நிகில் முருகன்

