கருணாநிதி சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்

AdidaMealam upcoming Film

திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று காலை 6.45 மணியவில் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு தொண்டையில் உணவு செலுத்துவதற்காக செலுத்தபட்டிருந்த பழைய குழாயை எடுத்துவிட்டு புதிய குழாயை அமைக்கும் அறுவை சிகிச்சை 4 மணி நேரமாக நடைபெற்றது. 

அதை தொடர்ந்து மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த கருணாநிதி 11 மணியளவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மருத்துவமனையில் இருந்து கருணாநிதி நேராக கோபாலபுரம் இல்லத்திற்கு சென்றார். கருணாநிதியின் உடல் நிலை பூரண நலத்துடன் இருப்பதாகவும் இது ஒரு வழக்கமான சிகிச்சைதான் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.