விக்னேஷ் ராஜா இயக்கத்தில், தனுஷ், மமிதாபைஜு, கே எஸ் ரவிக்குமார், ஜெயராம், கருணாஸ், சுராஜ் வெஞ்சரமூடு, பிருத்வி பாண்டியராஜன், ஸ்ரீஜா ரவி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் கர.
நாயகன் தனுஷ் திருட்டு வேலை செய்து வாழ்ந்து வருபவர். ஒரு நாள் இரவு ஒரு எம்எல்ஏவின் வீட்டில் திருடு செல்லும் போது அங்கிருந்து தப்ப முடியாமல் போலீசில் மாட்டிக் கொள்கிறார்.
காவல்துறை அதிகாரியாக இருக்கும் சுராஜ் தனுஷ் மீது பல வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைக்க நினைக்கிறார். அதனால் சுராஜை தாக்கிவிட்டு காவல் நிலையத்திலிருந்து தப்பித்து வேறு ஊருக்கு சென்று மனைவி மமிதா உடன் ஒரு ஹோட்டலில் தினக்கூலி வேலை செய்து வாழ்ந்து வருகிறார்.
தனுஷ் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதால் தானே தனியாக ஒரு ஹோட்டல் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறார். அதற்கான பணத்தை தன்னுடைய கிராமத்திற்கு சென்று தன் அப்பா கே.எஸ். ரவிக்குமாரிடம் இருக்கும் இடத்தை விட்டு பணத்தை வாங்கி வர வேண்டும் என்று முடிவு செய்து அங்கு செல்கிறார்.
16 வருடங்களுக்கு முன்பு தன் அப்பாவின் பணத்தைத் திருடி விட்டு ஓடி சென்ற தனுஷ் மீண்டும் அப்பா முகத்தில் முழிப்பதற்கு தயங்குகிறார்.
இருந்தும் அப்பாவான கே எஸ் ரவிக்குமார் மகனன எதுவும் சொல்லாமல் வீட்டிற்கு அழைத்துச் சென்று பார்த்து கொள்கிறார்.
நிலத்தை விற்று பணத்தை வாங்க வேண்டும் என்ற முடிவு செய்து கொண்டிருக்கும் வேளையில் அந்த ஊரில் உள்ள அனைவரும் அவர் அப்பாவான கே எஸ் ரவிக்குமாரையும் சேர்த்து அனைவரும் டிராக்டர் வாங்கி கடனில் மூழ்கி இருக்கிறார்கள்.
கே எஸ் ரவிக்குமாரிடம் நிலத்தை விற்று பணத்தை வாங்க வேண்டும் என்று தான் இங்கு வந்தேன் என்று கூறுகிறார் தனுஷ். மனம் உடைந்த கே எஸ் ரவிக்குமார் நான் இருக்கும் வரையிலும் இந்த நிலத்தை விற்க மாட்டேன் என்று கூறி விடுகிறார்.
இதை கேட்ட தனுஷ் கோவமாக சென்றுவிட்ட நிலையில் மறுநாள் வந்து பார்க்கும் பொழுது கே எஸ் ரவிக்குமார் இறந்து கிடைக்கிறார்.
தன்னுடைய அப்பாவின் இறுதி சடங்கை முடித்து அவரை தன்னுடைய சொந்த நிலத்தில் புதைப்பதற்காக காத்திருக்கும் நேரத்தில் வங்கி ஊழியர்கள் வந்து அந்த இடம் வங்கியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அங்கு பிணத்தை புதைக்க கூடாது என்று கூறி விடுகின்றனர்.
இதனால் தன்னுடைய அப்பாவின் உடலை தன்னுடைய நிலத்தில் புதைக்க முடியாமல் தனுஷ் தவித்து நிற்கிறார். அதன் பிறகு என்ன மாதிரியான முடிவுகளை தனுஷ் எடுக்கிறார்? என்பதை படத்தோட மீதிக்கதை.
தொழில்நுட்ப கலைஞர்கள்
எழுத்து & இயக்கம் : விக்னேஷ் ராஜா ஒளிப்பதிவு : தேனீ ஈஸ்வரர்
கலை இயக்கம் ; மாயப்பாண்டி
ஆடை வடிவமைப்பு : காவியா ஸ்ரீ ராம் படத்தொகுப்பு : ஸ்ரீஜித் சாரல்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM) ரியாஸ் கே அகமது
கர ஒரு சிறந்த அனைவரும் காண வேண்டிய ஒரு வாழ்வியல் படைப்பு.
ரேட்டிங் ⭐⭐⭐⭐

