களத்தூர் கிராமம் திரைவிமர்சனம்

தமிழக ஆந்திர எல்லையில் இருக்கும் களத்தூர் கிராமம் போலீஸ் ரெக்கார்டில் கரும்புள்ளியாக குத்தப்பட்ட கிராமம். களவுத்தொழிலையே தங்களது குலத்தொழிலாக செய்து வரும் அந்த கிராமத்து மக்களுக்கு தலைவரான கிஷோர் போலீசுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கிறார்.. அதேசமயம் நியாய தர்மத்துக்கு கட்டுப்பட்ட அவரது உயிர்நண்பன் வீரண்ணாவோ (சுலில் குமார்) சரியான சபல பேர்வழி..
அதனால் உள்ளூரில் பெண் கிடைக்காத அவருக்கு கிஷோரின் உத்தரவாதத்தின் மூலம் பெண் கொடுக்க பக்கத்து கிராமத்தில் ஒரு குடும்பம் முன்வருகிறது.. ஆனால், நண்பனுக்காக பெண் கேட்க, சொன்ன நேரத்தில் கிஷோர் வரமுடியாமல் போக நண்பர்கள் இருவருக்கும் பகை மூள்கிறது. இது ஜெயிலுக்கு சென்ற கிஷோரின் மனைவி யக்னாவை அபகரிக்கும் அளவுக்கு வீரண்ணாவை தூண்டிவிடுகிறது. இதனால் ஏற்பட்ட மோதலில் வீரண்ணாவை தானே கொல்லவேண்டிய சூழலுக்கு ஆளாகிறார் கிஷோர். 
அதற்கு பிராயச்சித்தமாக தங்களுக்கு பிறந்த மகனை வீரண்ணாவின் பெற்றோரிடம் கொடுத்து நல்லவிதமாக வளர்க்க சொல்கின்றார் கிஷோர். ஆனால் அவர்களோ கிஷோர்-யக்னா மீது வெறுப்பை ஊட்டி வளர்ப்பதுடன், சிறுவனை அழைத்துக்கொண்டு ஊரைவிட்டே வெளியேறுகின்றனர்.
வருடம் பல உருண்டோட வயதானாலும் ஒருபக்கம் தனது மகனை தேடிக்கொண்டே, இன்னொரு பக்கம் தனது ஊருக்குள் போலீஸ் நுழையாமல் கம்பீரம் காக்கிறார் கிஷோர். ஒருகட்டத்துக்குள் துரோகிகள் சிலரின் உதவியுடன் சில சதிவேலைகள் பார்த்து போலீஸார் களத்தூர் கிராமத்துக்குள் நுழைகின்றனர்.. அங்கு நடக்கும் கலவரத்தில் கிஷோரின் கூட்டாளிகள் என்கவுண்டரில் கொல்லப்படுகின்றனர். 
போலீஸின் காலடி படாமல் மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை கட்டிக்காத்த கிஷோர் இதற்கு பதிலடி கொடுத்தாரா.. இல்லை போலீஸ் அடக்குமுறைக்கு பலியானாரா..? சிறுவயதில் பிரிந்த கிஷோரின் மகன் என்ன ஆனார் படத்தின் மீதிக்கதை.

இத்திரைப்படம் வெற்றிப்பெற vtv24x7 ன் வாழ்த்துக்கள்