என்னைப்பார்த்து சிரித்தார் கலைஞர் – ராமதாஸ்

திமுக தலைவர் கலைஞரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று இரவு (31-10-2017) 8.30 மணிக்கு சந்தித்து நலம் விசாரித்தார். மு.க.ஸ்டாலின் , ஆ.ராசா, ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர். இந்த சந்திப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், ‘’என்னைப்பார்த்து சிரித்தார் கலைஞர். பேசுவதற்கு முயற்சி செய்தார். விரைவில் பேசுவார். முன்னை விட அவரது உடல்நலம் நன்றாக உள்ளது’’ என்று தெரிவித்தார்.