இதுவரை பார்த்திடாத விஞ்ஞான பூர்வமான ஒரு பேய் படம் “கைலா”

பூதோபாஸ் இண்டர் நேஷனல் பிலிம்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பாஸ்கர் சீனுவாசன் தயாரித்திருக்கும்  படம்  “கைலா”

இந்த படத்தில்  தானாநாயுடு கதா நாயகியாக அறிமுகமாகிறார். மற்றும் கௌசல்யா, அன்பாலயா பிரபாகரன், சிசர்மனோகர், மதுரை வினோத், வீரா, கோகன், குழந்தை நட்சத்திரம் கைலா,  இவர்களுடன் சர்வதேச கராத்தே பயிற்சியாளர்  பாஸ்கர் சீனுவாசன் நடித்துள்ளார்.

கதை, திரைக்கதை, வசனம், தயாரிப்பு, இயக்கம் –  பாஸ்கர் சீனுவாசன்
ஒளிப்பதிவு  –   பரணி செல்வம்
இசை  –  ஸ்ரவன்
பாடல்கள்   –   வடிவரசு
கலை   –    மோகன மகேந்திரன்
எடிட்டிங்  –   அசோக் சார்லஸ்
நடனம்  –  எஸ் எல் பாலாஜி
தயாரிப்பு நிர்வாகம்: ஆர் சுப்புராஜ்

படம் பற்றி இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன் கூறியதாவது..

முழுக்க முழுக்க திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது. உலகம்  முழுவதும் இன்று வரை பேய்  என்றால் ஒரு விதமான பயம் இருக்கத்தான் செய்கிறது. உலகில் ஆவிகள் இருக்கிறதா? அப்படி இருந்தாலும் அந்த ஆன்மாக்கள் பழிவாங்குமா ? இந்த கேள்விகளுக்கு விஞ்ஞானப்பூர்வமாக பதில்கள் இல்லை. ஆனாலும் அமானுஷ்ய சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது தான் இந்த கைலா. நாயகி தானாநாயுடு இப்படத்தில் ஒரு எழுத்தாளராக  நடிக்கிறார்..

அவர் பேயை பற்றி ஆராய்ச்சி செய்ய முடிவெடுத்து அதற்கான தேடுதலில் இறங்குகிறார்..
பல வருடங்களாக பேய் வீடு என்று மக்களால் சொல்லப்பட்டு  பூட்டியே கிடக்கும் ஒரு வீட்டை  தேர்ந்தெடுக்கிறார். அது ஒரு மர்மமான வீடு அதில் இரண்டு தற்கொலைகள், மூன்று எதிர்பாராத திகில் சம்பவங்கள், நான்கு கொலைகள், என படு பயங்கரமான திரைக்கதையை அமைத்துள்ளோம். அது படம் பார்க்கும் ரசிகர்களை வியப்படைய செய்யும். வழக்கமான பேய் படமாக இது இல்லாமல் வித்தியாசமான விஞ்ஞானபூர்வமான ஒரு பேய் படம் இது.

தேவ் என்ற வில்லன் கதாபாத்திரத்திற்கான அறிமுக காட்சிக்காக எட்டு வெளிநாடுகளில்  படப்பிடிப்பை நடித்தினோம் அந்த காட்சி மிகவும் நன்றாக வந்திருக்கிறது. படம் இம்மாதம் 13ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்கிறார் தயாரிப்பாளரும், இயக்குனருமான பாஸ்கர் சீனுவாசன்.