காடுவெட்டி விமர்சனம்

மஞ்சள் ஸ்கிரீன்ஸ் பட நிறுவனம் சார்பில் த. சுபாஷ் சந்திரபோஸ், K.மகேந்திரன், N. மகேந்திரன், C. பரமசிவம், G. ராமு  சோலை ஆறுமுகம் தயாரிப்பில், சோலை ஆறுமுகம்   இயக்கத்தில், ஆர். கே. சுரேஷ், சங்கீர்த்தனா, விஷ்மியா, சுப்ரமணியசிவா, அகிலன், ஆடுகளம் முருகதாஸ், ஆதிரா, சுப்பிரமணியன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ” காடுவெட்டி “

சென்னையில் வாழும் சுப்பிரமணிய சிவாவின் மகள் சங்கீர்த்தனா வேறு ஜாதியை சேர்ந்த ஒருவரை காதலிக்கிறார் இருவரின் பெற்றோர்களும் அதனை ஆதரித்து திருமணம் செய்து வைக்கிறார்கள்.

அதேசமயம் 200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் தெருக்கூத்து கலைஞரான சுப்பிரமணிய சிவாவின் மகள் வேறு ஒரு சாதியைச் சேர்ந்தவரை காதலித்துவிட்டதால், அவரை ஊர் வழக்கப்படி கொலை செய்துவிடுமாறும், இல்லை என்றால் அவள் தனக்கு பிறக்கவில்லை என்று சொல்லுமாறும், பஞ்சாயத்து வற்புறுத்துகிறது. 

இது ஒரு புறம் இருக்க, ஆர்.கே.சுரேஷ், ”பெண்ணை தொட்டா வந்து நிற்பேண்டா…” என்று 

பெண்களுக்கு ஏற்படும் அநீதீயிலிருந்து அவர்களை காப்பாற்றுவதற்காக அடிதடியில் ஈடுபடுகிறார். ஊர் மக்களுக்கு உதவி செய்கிறார், காதலிக்க சொல்லி தொல்லை கொடுக்கும் இளைஞர்களை வெட்டச் சொல்லி பெண்களிடம் அருவாள் கொடுக்கிறார். அதுமட்டுமில்லாமல் அரசியல் தலைவருடன் சேர்ந்து போராட்டம், ஆர்பாட்டத்தில் ஈடுபடுகிறார், அதனால் அவ்வபோது சிறைக்கு செல்கிறார். திரும்பி வந்து கொலைகள் செய்துவிட்டு மீண்டும் சிறைக்கு செல்கிறார்.

 

“பெண்ணை தொட்டா வருவேன்…” என்று சொல்லும் ஆர்.கே.சுரேஷ், சங்கீர்த்தனா விசயத்தில் என்ன செய்தார்? 

சுப்ரமணிய சிவா பஞ்சாயாத்துக்கு கட்டுப்பட்டு பெற்ற மகளை கொலை செய்தாரா? இல்லையா? என்பதே ‘காடுவெட்டி’ படத்தின் மீதிக்கதை.

 

 

தொழில்நுட்ப கலைஞர்கள் 

இசை : ஸ்ரீகாந்த் தேவா

பாடல்கள் இசை : வணக்கம் தமிழா சாதிக்.

ஒளிப்பதிவு : M. புகழேந்தி

பாடல்கள் : மணிகண்டன் ப்ரியா, பா. இனியவன், ராஜமாணிக்கம், இன்ப கலீல்.

கலை இயக்கம் : வீரசமர்

எடிட்டிங் : ஜான் ஆப்ரகாம்

ஸ்டண்ட் : கனல் கண்ணன்

நடனம் : தினேஷ்.

தயாரிப்பு மேற்பார்வை : மாரியப்பன் கணபதி.

மக்கள் தொடர்பு : மணவை புவன்

தயாரிப்பு : மஞ்சள் ஸ்கிரீன்ஸ்

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் : சோலை ஆறுமுகம்.