ஃபிப்ரவரி 14லில் வெளியாகும் “ஜுங்கா” சிங்கிள் டிராக் 

விஜய்சேதுபதி நடிப்பில் கோகுல் இயக்கி வரும் படம் ‘ஜுங்கா’. இந்த படத்தின் ஆடியோ விநியோக உரிமையை பிரபல திங்க் மியூசிக் நிறுவனம் கைபற்றியுள்ளது.  விஜய் சேதுபதியும், இயக்குனர் கோகுலும், இணைந்த ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்திற்கு இசை அமைத்த சித்தார்த் விபின் தான் இப்படத்திற்கும் இசை அமைத்துள்ளார்.

இவரது இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் சிங்கிள் டிராக் காதலர் தினமான ஃபிப்ரவரி 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. மற்ற பாடல்கள் விரைவில் வெளியாகும், இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் சாயிஷா, மடோனா செபாஸ்டியன் இருவரும்
நாயகிகளாக நடிக்கின்றனர்.