மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிப்பில், இயக்குநர் ராஜேஷ். எம் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ள ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
இப்படத்தில் ஜீவாவுடன் இவானா, பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். எம். சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
சமீபத்தில் வெளியான படத்தின் ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து, இந்த திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட இருப்பதாக மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் இந்தியா CEO திரு. ராசிக் அஹ்மது சமூக வலைதளம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.


