ஜீவி 2 விமர்சனம் 3/5

‘ஜீவி’ படத்தின் கதை தொடர்பியல் விதியை மையப்படுத்தித்தான் உருவாக்கப்பட்டிருந்தது. எங்கோ ஏதோ ஒரு இடத்தில் ஒருத்தர் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் திரும்பவும், இன்னொரு இடத்தில் வேறு ஒருவருக்கு நடப்பதற்கு நிச்சயம் ஒரு தொடர்பு இருக்கும். அதைத் தெரிந்து கொண்ட நாயகன் அந்த நிகழ்வுகளைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்வார். அவரால் அது முடிந்ததா என்பதுதான் முதல் பாகத்தின் கதை.

இந்த தொடர்பியல் விதி அத்துடன் முடிந்துவிட்டதா… இல்லை மீண்டும் தொடருமா என ஹீரோவின் நண்பன் கேட்கும் கேள்வியில்தான் இந்த இரண்டாம் பாகத்தின் கதை தொடங்குகிறது.

மீண்டும் இவர்கள் வாழ்வில் தொடர்பியல் விதி விளையாடியதா..? அதன் மூலம் என்னென்ன பிரச்சனைகள் உருவாகின..? அதையெல்லாம் நாயகன் தனது புத்திசாலித்தனத்தால் கண்டுபிடித்து அதை சரி செய்தாரா..? என்பதுதான் இந்த ‘ஜீவி-2’ படத்தின் கதை.

நடிகை-நடிகர்கள்:

வெற்றி, கருணாகரன், அஸ்வினி சந்திரசேகர், ரமா, ரோகிணி, மைம் கோபி, ‘அருவி’ திருநாவுக்கரசு மற்றும் பலர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:

தயாரிப்பு : வி ஹவுஸ் புரொடக்சன் – சுரேஷ் காமாட்சி
இணை தயாரிப்பு : வெற்றிகுமரன்
நாகநாதன் சேதுபதி
எழுத்து இயக்கம் : V.J.கோபிநாத்
இசை : கே.எஸ்.சுந்தரமூர்த்தி
ஒளிப்பதிவு : பிரவீண் குமார்
படத் தொகுப்பு : பிரவீண் கே.எல்.
சண்டை பயிற்சி இயக்கம் : சுதேஷ், பத்திரிகை தொடர்பு : A.ஜான்